மாடலிங் துறையில் சக போட்டியாளருடன் ஏற்பட்ட பிரச்சனையால் வெளிச்சத்திற்கு வந்தவர் மீரா மிதுன். சரிச்சையான பதிவுகளை பதிவிடுவதில் பேர்போனவர். தன்னைத்தானே சூப்பர் மாடல் என்று சொல்லிக்கொண்டு பெருமையடித்து கொள்வார் உண்மையில் இவர் சூப்பர் வீடியோ சர்ச்சை மாடல் ஆவர்.
சமீபத்தில் இவர் பட்டியல் என சமூக மக்களையும் இயக்குனர்களையும் இழிவாக விமர்சித்து வீடியோ வெளிட்டு சர்சைக்குள்ளாகினர். எனவே அவர் மீது சென்னை சைபர் கிரைம் Ipc சட்டப்பிரிவு 157(இரு தரப்பினார்க்கிடையே கலவரத்தை தூண்டுதல் ) முதலிய 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளார்.
இதன் மூலம் இவர் கைது செய்யப்படலாம் என்ற செய்தி வெளியானது, இதனையடுத்து சூப்பர் சர்ச்சை மாடல் மீரா மிதுன் தலைமறைவானார். தலைமறைவானது மட்டும்மல்லாமல், என்னை கைது செய்வது கனவில்தான் நடக்கும் என வீடியோ வெளியிட்டார். இவரை என் இன்னும் கைது செய்யவில்லை என சமூக வலைத்தளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில் கேரளாவில் பதுங்கி இருந்த மீரா மிதுனை போலீசார் கைது செய்தனர். அவர் கைது செய்வதற்கு முன் வீடியோ வெளியிட்டு கதறி அழுதுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
என் மேல் கைபட்டால் கத்தி எடுத்து குத்தி இங்கையே செத்துடுவேன், இவங்களை போக சொல்லுங்க என அழுது கதறி உள்ளார். மீரா மிதுன் கைது செய்யப்பட்டதால் காவல் துறையின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Post a Comment