சாணிக் காயிதம் படத்தின் மிரட்டல் லுக்கில் இருக்கும் இயக்குனர் செல்வராகவனின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
புதுப்பேட்டை, காதல்கொண்டேன், ஆயிரத்தில் ஒருவன் என பல படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம்வரும் செல்வராகவன் கடைசியாக சூர்யாவின் என்ஜிகே படத்தினை இயக்கியிருந்தார். தற்போது இவர் கதாநாயகனாக சாணிக்காயிதம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இயக்குனர் அருண் மாதேஷ்வரன் இயக்கும் இந்தப்படத்தில் செல்வராகவனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வைரலாகிய புகைப்படம் |
இந்த நிலையில், சாணிக்காயிதம் படத்தில் மிரட்டலான லுக்கில் இருக்கும் இயக்குனர் செல்வராகவனின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இயக்குனர் செல்வராகவன் இப்படத்தில் நடித்து முடித்து விட்டு அடுத்ததாக நடிகர் தனுஷை வைத்து நானே வருவேன் என்ற படத்தை இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இந்த மாதம் 20 -அம் தேதி தொடங்கவுள்ளது. இதனை தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன் 2 திரைப்படத்தை இயக்கவுள்ளார்.
Post a Comment