கொரோன குமாருக்கு ஓகே சொன்ன சிம்பு

கடந்த 2013-அம் ஆண்டு விஜய்சேதுபதி மற்றும் நந்திதா நடிப்பில் வெளியாகி நல்லா வரவேற்பை பெற்ற படம் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா. முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகி இருந்த இப்படத்தை ரௌத்திரம் பட இயக்குனர் கோகுல் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய்சேதுபதி கதாபாத்திரமான சுமார் மூஞ்சி குமார் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

விஜய்சேதுபதி நடிக்க தொடங்கிய காலகட்டத்தில் இப்படம் அவருக்கு தமிழ் சினிமாவில்  நல்ல பெயரினை பெற்று பெற்றுத்தந்தது. தற்போது காமெடி, ஆக்சன், வில்லன் என அணைத்து கதா பாத்திரங்களிலும் தனது நடிப்பு திறமையை சிறப்பான முறையில் வெளிப்படுத்தி வருகிறார். 


இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்க உள்ளதாக தாவல் வெளியாகியுள்ளது. மேலும் கொரோன குமார் என்ற தலைப்பில் வெளியாக உள்ள இப்படத்தை இயக்குனர் கோகுல் இயக்கவுள்ளார். இப்படத்தை சினிமா வாலா பிக்சர் சார்பாக சதிஷ் தயாரிக்க உள்ளார். 

படத்தின் தலைப்பு மட்டும் இல்லை படத்தின் நாயகனும் மாற்றப்பட்டுள்ளார். இப்படத்தின் இரண்டாம் பாகதில் விஜய் சேதுபதி நடிக்கவில்லை. அவருக்கு பதில் நடிகர் சந்தானம் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது.  


இந்நிலையில் தற்போது சந்தானத்திற்கு பதிலாக சிம்பு இப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சிம்புவும் இப்படத்தில் நடிப்பதற்கு சம்மதம் தெரித்துள்ளாராம். எனவே இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

சிம்பு தற்போது மாநாடு படத்தில் நடித்து முடித்துள்ளார். அதனையடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் நதிகளிலே நீராடும் சூரியன் மற்றும் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல ஆகிய படங்களில் நடிக்கவுள்ளார். இதனை முடித்த பின்னர் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இரண்டாம் பாகத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Post a Comment

Previous Post Next Post