கீழடி
கீழடி மதுரையில் இருந்து தென்கிழக்கு திசையில் 13கிமீ தொலைவில் அமைந்துள்ளது.இந்த இடத்தில் இருந்து இரண்டு கிமீ தொலைவில் வைகை நதி பாய்கிறது.கிழடிக்கு கிழக்கே மணலூரும், தென்கிழக்கில் அகரமும், மேற்கில் கொந்தகை என்ற ஊரும் அமைந்துள்ளது.
அறிமுகம்
கீழடி அகழாய்வு பகுதி வான்வழி பார்வையில் |
2013 அம் ஆண்டு கிழடியில் அகழாய்வு தொடங்கப்பட்டு தற்போது 7 அம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகின்றது. முந்திய ஆண்டுகளில் (2013-14, 2014-15, 2015-16, மற்றும் 2016-17) இப்பகுதியில் மத்திய தொல்லியல் துறை அகழாய்வு பிரிவு, பெங்களூர் பிரிவு அகழாய்வு மேற்கொண்டது.
நான்கு, ஐந்து, ஆறு மற்றும் ஏழாம் கட்ட அகழாய்வை தமிழக அரசு தொல்லியல் துறை முறையே 2017-2018, 2018-2019, 2019-2020, 2021-2022 அம் ஆண்டுகளில் செயல்படுத்தி வருகிறது. தற்போது ஏழாம் கட்ட அகழாய்வு முறைப்படுத்தப்பட்ட முறையில் நேர்த்தியாக நடைபெற்று வருகிறது.
அகழாய்வின் தரவுகள்
முதற்கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட குழிகள் பறவை பார்வையில் |
மத்திய தொல்லியல் துறை மேற்கொண்டு மூன்று கட்ட அகழாய்வில் 7, 818 தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.
அதன் பிறகு, 4அம் கட்ட அகழாய்வை தமிழக தொல்லியல் துறை மேற்கொண்டது, இதில் 5, 820 தொல்பொருள்கள் கண்டெக்கப்பட்டன.
ஐந்தாம் கட்ட அகழாய்வில் 750-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்தன.
ஆறாம் கட்ட அகழாய்வு பணி கீழடி, கொந்தகை, அகரம் மற்றும் மணலூர் ஆகிய இடங்களில் நடந்தன. இதில் 3, 500-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
சமீபத்தில் 7அம் கட்ட அகழாய்வு பணிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து ஏழாம் கட்ட அகழாய்வு பணி நேர்த்தியான முறையில் நடைபெற்று வருகிறது.
அகழப்பட்ட பொருட்கள்
கீழடி அகழாய்வில் பண்டைய பண்பாட்டை வெளிக்கொணரும் வகையில் செங்கற் கட்டுமானகள், சுடுமண் உறைக் கிணறுகள், மழையில் நீர் வடியும் வகையில் விரல்களால் அழுத்தி பள்ளமிடப்பட்ட கூரை ஓடுகள் போன்றவை காணப்படுகின்றன.
உறைக்கிணறு |
7-அம் கட்ட அகழாய்வில் கிடைத்த அழகிய வேலைப்பாடுடன் கூடிய உறைகிணறு |
மேலும், தங்க அணிகலன் பகுதிகள், செப்பு பொருட்கள் , இரும்பு கருவி பாகங்கள், சுடுமண் சொக்கட்டான் காய்கள், வட்ட சில்லுகள், சுடுமண் காதணிகள், கண்ணாடி மற்றும் விலை உயர்ந்த மணிகள் (அகேட் சூதுபவளம், ஸ்படிகம் ), மண்பாண்ட ஓடுகள்,மனித எலும்புக்கூடுகள்,மண்டையோடுகள்,முதுமக்கள் தாழிகள், புகைப்பான்கள், தங்க நாணயம், ரோமானிய சின்னம் பொறிக்கப்பட்ட மண்பாண்டங்கள், தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மட்கல துண்டுகள், மனித மற்றும் விலங்கு வடிவ பொம்மைகள் போன்றவை கண்டெடுக்கப்பட்டன.
மனித எலும்புக்கூடு |
குறியீடுகளும் கூடிய மண்பானை ஓடு |
இங்கு கண்டெடுக்கப்பட்ட பெரும்பாலான மண்பாண்டகளில் கீறல்களும், குறியீடுகளும், வடிவங்களும் காணப்பட்டன.இவை சுடுவதற்கு முன்பும் பின்பும் பொறிக்கப்பட்ட நிலையில் இருந்தன.
கீழடி நாகரிகம்
கீழடி வைகை நதிக்கரைக்கு மிக அருகில் இருப்பதால் நகர நாகரத்தில் சிறந்து விளங்கியதுர்கானா தெளிவு கிடைத்துள்ளது. 4-அம் கட்ட ஆய்வில் கிடைக்கப்பட்ட 6கரிம மாதிரிகளின் முடிவுகள் அடிப்படையில், வைகை நதிக்கரையில் நகரமயமாதல் கி.மு. 6-அம் நூற்றாண்டில் தொடங்குக்குறது என்பது தெளிவாகிறது.
எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட உடைந்த பானை ஓடுகள் |
எழுத்து பொறிப்பு பெற்ற பானை ஓடுகள் கிடைக்கப்பட்டதன் மூலம் கி. மு 6-அம் நூற்றாண்டிலே தமிழகம் எழுத்தறிவு பெற்ற சமூகமாக விளங்கியுள்ளதை நிலைநிறுத்துகிறது.
வேளாண்மை மற்றும் கால்நடை
கீழடி அகழாய்வில் விலங்குகளின் 70 எலும்பு துண்டுகளின் மாதிரிகள் கண்டெடுக்கப்பட்டன, அவை அறிவியல் பகுப்பாய்விக்கு உட்படுத்தப்பட்டு அவற்றின் தன்மைக்கேற்ப வகைப்படுத்தப்பட்டதில் இவை, திமிலுள்ள காளை, கலைமான், எருமை, வெள்ளாடு, காட்டுப்பன்றி மற்றும் மயில் ஆகிய உயிரினங்களுக்குரியவை என அடையாளம் காணப்பட்டது. இவ்விலங்கினங்கள் வேளாண்மைக்கு உறுதுணையாக செய்யும் வகையில் கால்நடைகளாக வளர்க்கப்பட்டுள்ளன என கருதலாம்.
திமில் உள்ள காளையின் எலும்பு துண்டுகள் |
இதில் கலைமான், வெள்ளாடு, காட்டுப்பன்றி ஆகியவற்றின் எலும்பு மாதிரியில் வெட்டுக்கள் காணப்படுவதால் எவை உணவிற்காக பயன்படுத்தினர் என்று தெரியவருகிறது. இதன் முலம் சங்ககால சமூகம் வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்பை முதன்மை தொழிலாக கொண்டிருந்தனர் என தெரியவருகிறது.
கட்டட தொழில்நுட்பம்
அக்கால மக்கள் மிக தரமான கட்டுமான பொருட்களை பயன்படுத்தினர். இங்கு கண்டறியப்பட்ட செங்கல், சுண்ணாம்பு கலவை ஆகியவை பகுப்பாய்விற்கு பிறகு, இவை ஒவொன்றிலும் சுண்ணாம்பு , சிலிகா மண் , இரும்பு, அலுமினியம், மேக்னிஷியம் போன்ற கனிமங்கள் காணப்படுகின்றன என அறியமுடிகிறது.
கட்டட சுவர் |
கட்டுமான சுவரில் 80% அதிகமாக சிலிக்காவும், பிணைப்பு காரணியாக 7%சுண்ணாம்பும் உள்ளது. இந்த சுண்ணாம்பு சாந்தில் 97% சுண்ணாம்பு இருப்பதே இன்றளவும் வலிமையாக இருப்பதற்கு காரணமாக உள்ளது என ஆய்வு தெரிவிக்கிறது.
விரிவான கட்டட தொகுதி |
கீறல்கள் மற்றும் குறியீடுகள்
கீழடி அகழாய்வில் பெரும்பாலான பானை ஓடுகள் கீறல்களுடனும் குறியீடுகளுடனும் கண்டெடுக்கப்பட்டன.இத்தகைய குறியீடுகள் கருப்பு சிவப்பு பானை ஓடுகளில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இத்தகைய கீறல்கள் பொறித்த 1, 001 பானைஓடுகள் இரும்பு காலம் தொட்டு இப்பகுதியில் மக்கள் வாழ்ந்து வருகின்றன என்பதை உணர்த்துகின்றன.
கீறல்கள் மற்றும் குறியீடுகளுடன் கூடிய பானைஓடு |
எழுத்தறிவு
எழுத்துக்களுடன் கூடிய உடைந்த பானைஓடுகள் |
தமிழ்நாட்டை பொறுத்தவரை குறியீடுகளுக்கு அடுத்து காணக்கிடைக்கின்ற விரிவடிவம் தமிழ்பிராமி எழுத்து வடிவமாகும். இவெழுத்தை தமிழி என்றும் தமிழ் எழுத்துக்கள் என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். கீழடி அகழாய்வில் தமிழி (தமிழ் பிராமி )எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட 54பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன.
ஆதன் என எழுதப்பட்ட உடந்தை பானைஓடு |
குவிரன் ஆத[ன் ] |
இவற்றில் குவிரன் ஆத[ன் ], ஆதன் போன்ற ஆட்பெயர்களும், முழுமைபெறாத எழுத்துகளுடன்கூடிய உடைந்த பானை ஓடுகளும் கிடைத்துள்ளன. இதன் அடிப்படையில், அக்கால மக்கள் கி. மு 6அம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்றவர்களாக விளங்கினார் என்பதை உறுதிசெய்யலாம்.
தொழில்கள்
கைவினை
கிழடி அகழாய்வில் இரண்டு இடங்களில் 4மீட்டர் அளவுக்கு மேல் மிகப்பெரிய அளவில் பானை ஓடுகளின் குவியல் கண்டறியபட்டதை கருத்தில் எடுத்துக்கொண்டு இங்கு பானை வனையும் தொழிற்குடம் செயல்பட்டு இருக்கவேண்டும் என்ற முடிவுக்கு வரலாம்.
பானை ஓடுகளின் குவியல் |
கிழடியில் கிடைத்த கருப்பு சிவப்பு பானை ஓடுகளின் சிவப்பு நிறத்திற்கு இரும்பின் தாது பொருளான ஹேமடைட் என்பதையும், கருப்பு நிறத்திற்கு கரிம பொருளாலான காரியையும் பயன்படுத்தியுள்ளனர்.
நெசவு
எவ்வகழாய்வில், நூல்களை நூற்க பயன்படும் தக்களி (10), துணிகளில் வரைய பயன்படும் எலும்பால் ஆன தூரிகை, ஊசி, கருங்கல், குண்டு போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
எலும்பினால் ஆன வரைகோள் |
தக்களி |
எனவே இவை இப்பகுதியில் நெசவு தொழில் சிறந்து விளங்கிருப்பதுர்கன சான்றாக பார்க்கப்படுகிறது.
வாழ்விழல் முறை
கீழடி அகழாய்வில் கிடைக்க பட்ட பொருட்கள், அக்கால சமூகத்தை பிரதிபலிக்கும் வகையில் உள்ள. அச்சமூகம் வேளாண்மை, கால்நடை வளர்ப்பு ஆகியவற்றை முதன்மை தொழிலாக கொண்டிருந்தது.
குடுவை |
அரவைகல் |
இங்கு அன்றாடம் பயன்படுத்தபடும் சிப்பு, கண்ணாடி, குடுவை, அரவைகல் போன்றவை கண்டெடுக்கப்பட்டன.
மேலும், பெண்கள் தங்களை அலங்கரித்துக்கொள்ளும் தங்கத்தினால் ஆன ஆபரண துண்டுகள், கண்ணாடி மணிகள், செப்பு அணிகலன்கள், மணிகள், 4000மேற்பட்ட கல்மணிகள், சங்கு வளையல்கள், தந்த வளையல்கள், பளிங்கு கற்களாலான மணிகள் போன்றவை கண்டெடுக்கப்பட்டன.
தங்கத்தால் ஆன ஆபரணங்கள் |
கண்ணாடி மணிகள் |
இத்தகைய அணிகலன்கள் சங்ககால சமூகம் வளமுடன் இருந்ததற்கான சான்றாகும்.
பொழுதுபோக்கு
கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட விளையாட்டு பொருட்கள் அன்றய சமுதாயத்தின் வாழ்கை முறையையும், பொழுதுபோக்கு அம்சத்தையும் பிரதிபலிக்கின்றன. இங்கு வட்டசில்லுகள்,பகடை காய்கள், வட்டசுற்றிகள், வண்டிகளின் சக்கரங்கள், சதுரங்க காய்கள் போன்ற விளையாட்டு பொருட்கள் கிடைத்துள்ளன.
வாட்டசில்லுகள் |
பகடைக்காய்கள் |
சதுரங்க காய்கள் |
மேலும் இங்கு சூடு மண்ணால் ஆன மனித உருவங்கள், விலங்கு உருவங்கள் போன்றவை கிடைத்துள்ளன.
சுடுமண் உருவங்கள் |
கீழடி அகழாய்வில் சுடுமண்ணால் ஆன 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், 650க்கும் மேற்பட்ட விளையாட்டு பொருட்கள் கிடைத்தபோதிலும் வழிபாடு தொடர்பான தொல்பொருட்கள் எவையும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வணிகம்
கீழடி அகழாய்வு பகுதிகளில் வடமேற்கு இந்தியாவின் மகாராஷ்டிரம், குஜராத் போன்ற பகுதிகளில் பரவலாக காணப்படும் அகேட் மற்றும் சூது பவளம் போன்றவை கண்டெடுக்கப்பட்டன. மேலும் ரோம நாட்டு சாயல் பானை ஓடுகள் இங்கு காணப்படுகிற்றன. இதான் மூலம் கிழடியில் வணிகம் செய்ததிற்கான அடையாள கூறுகள் கிடைக்கின்றன.
சூதுபவள மணிகள் |
ரோம் நாட்டு சாயல் கொண்ட பானை ஓடுகள் |
கிழடியின் முக்கியத்துவம்
தமிழ்நாட்டில் இதுவரை அகழப்பட்ட அகழாய்வுகளில் சுட்ட செங்கல்களால் ஆன கட்டடங்களுடன் நகர நாகரிகம் இருந்தது இங்குதான் முதன்முறையாக வெளிப்பட்டுள்ளது. இதை தவிர, கி. மு 3அம் நூற்றாண்டில் இருந்து கி. மு 2 அம் நூற்றாண்டு வரையிலான கலப்பகுதியே தமிழ்ச் சங்க காலம் என கருதப்பட்டது . ஆனால் இங்கு கிடைத்த பிராமி எழுத்துக்களை வைத்து சங்க காலம் மேலும் மூன்று நூற்றாண்டுகள் பின்னோக்கி செல்லலாம் என கருதப்படுகிறது.
கங்கை சமவெளியில் இரண்டாம் நகர நாகரிகம் கி.மு 6 அம் நூற்றாண்டில் தோன்றியது. ஆனால், அதற்கு இணையான காலகட்டத்தில் தமிழகத்தில் எந்த நகர நாகரிகமும் இருந்ததற்கான ஆதாரங்கள் இதுவரை கிடைத்ததில்லை. முதன் முதலாக கிழடியில் அதே காலகட்டத்தில் நகர நாகரீகத்திற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது. ஆகவே இரண்டாம் நகர நாகரீக காலத்தில் தமிழகத்தில் நகர நாகரீகம் இருந்ததாக தெரியவருகிறது. இச்சான்றுகள் தமிழகத்தில் நிலவிய சங்ககாலப் பண்பாட்டு வரலாற்றாய்வில் திருப்புமுனை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.
Post a Comment