Time travel train ஆ? 100 ஆண்டுகளுக்கு முன்பு பயணிகளுடன் காணாமல் போன zenetti ரயில்

 


இரயில் சம்பந்தப்பட்ட பல மர்மமான நிகழ்வுகளை நீங்கள் கேள்விப்பட்டதுண்டு, ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக 104 பயணிகளுடன் காணாமல் போன இத்தாலி ரயில் குறித்த மர்மம் இன்றுவரை தீர்க்கப்படாமல் உள்ளது. 


இந்த நிகழ்வு 1911ஜூன் மாதம் ஆரம்பமாகிறது, அதே ஆண்டு ஜூன் மாதம் இத்தாலியின் ரயில்வே நிறுவனமான ஜானெட்டி (zanetti) தனது ரயிலின் புதிய மாடலுக்கான இலவச பயணத்தை அறிவித்தது. ஜானெட்டி(zanetti) ரயில் ரோம் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டது.  இந்த ரயிலில் 100 பயணிகள் மற்றும் 6 ரயில்வே ஊழியர்கள் என 106 நபர்கள் இருந்தனர்.மேலும் உணவு மற்றும் மதுபான வசதிகள் செய்யப்பட்டு இருந்தது.

  


இந்த ரயில் ஒரு சுரங்கப்பாதை வழியாக செல்ல வேண்டியிருந்தது, ரயில் சுரங்க பாதையை அடைந்த பிறகு ரயில் காணாமல் போனது. அவற்றை பற்றி நிறைய ஆராய்ச்சிகள் செய்யப்பட்டது ஆனால் ரயிலின் தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இன்றுவரை இந்த ரயிலும் ரயிலில் சென்ற பயணிகளும் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை.


இதான் பிறகு கூறப்பட்டது, 

ரயிலில் இருந்த 106 நபர்களில் 2 பேர் பத்திரமாக வெளியே வந்தனர். அவர்கள் மிகவும் மனநிலை பாதிக்கப்பட்டு காயங்களுடன் இருந்தனர். தீவிர சிகிச்சை மற்றும் மனநிலை சிகிச்சைக்கு பிறகு இறுதியாக இயல்புநிலைக்கு வந்தனர். எனினும் இந்த சம்பவம் குறித்து அவர்கள் எதுவும் கூற தயாராக இல்லை. இறுதியாக அதில் ஒருவர் கூறியதாவது, ரயில் சுரங்கப்பாதையை அடைந்தவுடன் , அடர்த்தியான வெள்ளை புகை ரயிலை சூழ தொடங்கியது, மக்கள் திடீரென்று பதட்றமடைந்த்து அலற ஆரமித்தனர். ரயிலில் ஒரு பெரிய விபத்து நடந்ததாக கிட்டத்தட்ட அனைவரும் உணர்ந்தனர். இதனால் அவர் ரயிலில் இருந்து குதித்ததாக கூறினார். பின்னர் சுரங்கப்பாதைக்குள் சென்ற ரயில் மீண்டும் வெளியேறவில்லை என்றும் தெரிவித்தார். இந்த காரணங்களால் இந்த ரயிலை பேய் ரயில் என்றும் அழைக்கப்படுகிறது. 


இந்த சம்பவத்திற்கு பிறகு ரயிலின் மர்மம் ஆழமாக சென்றது. பலரின் கூற்றுப்படி, இந்த ரயில் சில இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளால் கைப்பற்றப்பட்டது மற்றும் அவர்கள் பயணத்தில் கடந்த காலத்தை அடைந்தனர் என கூறினார். பல ஊடக அறிக்கைகள், இது 1840 களில் மெக்சிகோவை அடைந்தது என கூறுகிறது. 

இதனிடையே மெக்சிகோவில் உள்ள ஒரு மருத்துவர், தான் பணிபுரியும் மருத்துவமனையில் 104 பேர் மர்மமான முறையில் அனுமதிக்கப்பட்டதாக கூறினார். அவர்கள் அனைவரும் பைத்தியம் பிடித்ததுபோல் இருந்ததாகவும், ரயில் மூலம் அவர்கள் வந்தனர் என்றும் தெரிவித்தார். 

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், ரோம் நகரிலிருந்து மெக்சிகோவிற்கு நேரடியாக செல்ல அந்த நேரத்தில் அத்தகைய ரயில் எதுவும் இயக்கப்படவில்லை. மற்றொரு விஷயம் என்னவென்றால்,  மருத்துவர் கூறியதுபோல 104 பேர் மெக்சிகோவிற்கு வந்ததாக பதிவும் இல்லை. இந்த விசித்திரமான நிகழ்வு இன்றுவரை உலகம் முழுவதும் மர்மாகவே உள்ளது. எனினும் இதைவிட பெரிய மர்மம் என்னவென்றால், இந்த ரயில் இத்தாலி, ரஷ்ய, ஜெர்மனி மற்றும் ருமேனியாவின் பல பகுதிகளில் காணப்படுவதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு முறையும் மக்கள் ரயிலை பார்க்கும்போது, அதனை 1911-ல்  காணாமல் போன ரயிலை போலவே இருப்பதாக கூறுகின்றனர். 

மற்ற நாடுகள் மட்டுமல்ல நம் நாட்டில் உள்ள பல ரயில் நிலையங்களும் மர்மமானதாக கருதப்படுகிறது. உதாரனமாக, மேற்கு வங்காளத்தின் புருலியாவில்(purulia)உள்ள பெகுன்கோடார் (beguncodor)ரயில் நிலையம் நாட்டில் அதிகம் மர்மம் நிறைந்த ரயில் நிலையம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையம் 1960 இல் திறக்கப்பட்டது. இதை திறப்பதில் சந்தால் ராணி(சந்தால் queen ) முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது. 


தொடக்ககாலத்தில் எல்லாம் சரியாக நடந்தது, ஆனால் திடீரென்று 7 ஆண்டுகளுக்குப் பிறகு மர்மமான விபத்துகள் நடக்கத் தொடங்கின. பயம் அதிகரிக்க தொடங்கியது மற்றும் ரயில்வே ஊழியர்கள் வேலை செய்ய மறுக்க தொடங்கிய நிலையில் நிலையம் பூட்டப்பட்டது. பல ஆண்டுகள் இங்கு எந்த ரயிலும் நிறுத்தப்படவில்லை. ரயில்கள் கடந்து சென்றாலும் இந்த இடத்தில் ரயிலை வேகப்படுத்துவார்கள். இந்த இடத்திலிருந்து ரயிலின் முன்பதிவு நிறுத்தப்பட்டது. 


இதான் பிறகு 2009 இல், அப்போதைய ரயில்வே அமைச்சராக இருந்த மம்தா பானர்ஜி மீண்டும் பெகுன்கோடார் (beguncodor) நிலையத்தை தொடங்கினர். தற்போது 10க்கும் மேற்பட்ட ரயில்கள் இங்கு நிற்கின்றன, ஆனால் இரவு நேரங்களில் எந்த ரயிலும் இங்கு நிற்பதில்லை மற்றும் எந்த பயணியும் காத்திருப்பதில்லை. சுமார் 40 ஆண்டுகளாக, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்த நிலையத்தை பார்வையிட வந்தனர். அவர்கள் பேய் சுற்றுலாவில் ஆர்வம் கொண்டிருந்தனர். ரயில்வ நிலையம் மீண்டும் தொடங்கப்பட்ட பிறகு மர்மமான நடவடிக்கை எதுவும் இங்கு காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது... 

Post a Comment

Previous Post Next Post