2021 சுதந்திர தினத்தை முன்னிட்டு காவலர்களுக்கு சிறப்பு பதக்கம்......! | 2021 independence day police medals |

 


2021 ஆம் ஆண்டு 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல் துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் சிறப்பு பதக்கங்கள் வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 


பொது மக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய 5 காவலர்களுக்கு சிறந்த பொது சேவைக்கான முதலமைச்சரின் சிறப்பு பதக்கமும், புலம் விசாரணைப் பணியில் மிக சிறப்பாக பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணியற்றியதை பாராட்டும் வகையிலும் 10 காவல் துறை அதிகாரிகளுக்கு தமிழக முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப்பணி  தங்கப்பதக்கம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


சிறந்த பொது சேவைக்கான முகாமைச்சரின் சிறப்பு பதக்கத்தை பெரும் 5 காவலர்கள் 

  1. திரு. அமரேஷ் பூஜாரி, இ. கா. ப.., கூடுதல் காவல்துறை இயக்குனர். தொழில்நுட்ப சேவைகள், சென்னை. 
  2. முனைவர் ஆ. அமல்ராஜ், இ. கா. ப..,  கூடுதல் காவல்துறை இயக்குனர், செயலகம், சென்னை. 
  3. திருமதி சு. விமலா, காவல் துணை ஆணையர், நுண்ணறிவு பிரிவு சென்னைப் பெருநகரக் காவல் 
  4. திரு நா. நாவுக்கரசன், காவல் ஆய்வாளர், கோட்டைப் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு, திருச்சி மாநகரம். 
  5. திரு பா. பிரேம் பிரசாத், தலைமை காவலர் 27845, மத்திய குற்ற பிரிவு சென்னைப் பெருநகரக் காவல். 

புலன் விசாரணைக்கான சிறப்புப்பணி தங்கப்பதக்கம் பெரும் 15 காவலர்கள்  

  1. திருமதி வெ. செல்வி, காவல் ஆய்வாளர், திருமயம் அணைத்து மகளிர் காவல் நிலையம், புதுக்கோட்டை மாவட்டம். 
  2. திருமதி கா. சாந்தி, காவல் ஆய்வாளர், குற்ற பிரிவு குற்ற புலனாய்வுத்துறை கன்னியாகுமரி.
  3. திரு எஸ். ரவி, காவல் ஆய்வாளர், கொமரபாளையம் காவல் நிலையம்,  திருச்செங்கோடு உட்கோட்டம், நாமக்கல் மாவட்டம். 
  4. திருமதி கா. சாயிலட்சுமி, காவல் ஆய்வாளர், நேசமணி நகர் வட்டம். கன்னியாகுமரி மாவட்டம். 
  5. திருமதி ஆ. அமுதா, காவல் ஆய்வாளர், சத்திரகுடி காவல் நிலையம், ராமநாதபுரம். 
  6. திருமதி வே. சந்தானலட்சுமி, காவல் ஆய்வாளர், குற்ற பிரிவு, குற்றபுலனாய்வுத்துறை, திண்டுக்கல். 
  7. திரு சு. சீனிவாசன், காவல் ஆய்வாளர், திருநாவலூர் காவல் நிலையம், கள்ளக்குறிச்சி மாவட்டம். 
  8. திரு மு. கனகசபாபதி, காவல் ஆய்வாளர், பி 2 ஆர். எஸ். புரம் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையம், கோவை மாநகரம். 
  9. திரு க. அடிவேல், காவல் ஆய்வாளர், தென்காசி காவல் நிலையம், தென்காசி மாவட்டம். 
  10. திருமதி ப. அனந்தலட்சுமி, காவல் உதவி ஆய்வாளர், சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு, சேலம் மாவட்டம். 
விருதுகள் பெரும் ஒவொருவருக்கும் தலா எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்கப்பதக்கமும், 25 ஆயிரம் ரொக்கமும் பரிசாக வழங்கப்படும்.மேற்கண்ட விருதுகள் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் பிறிதொரு விழாவில் வழங்கப்படும். 

Post a Comment

Previous Post Next Post