National financial awareness day....! தேசிய நிதி விழிப்புணர்வு நாள் இன்று... (14-08-2021)

 14-08-2021 இன்று தேசிய நிதி விழுப்புணர்வு தினம் (National economic awareness day) என்பது உங்களில் இதனை பேருக்கு தெரியும்?



நிச்சயம் பல பேருக்கு தெரிய வாய்ப்பிருக்காது, ஆனால் இது நீங்கள் நினைப்பதை விட முக்கியமானது, நிதி சுதந்திரத்தைவிட வேடிக்கையானது என்ன?. நீங்க சற்று நினைத்து பாருங்கள் உங்கள் மீது கடன் சுமை எதுவும் இல்லாதபோது நீங்கள் எப்படி உணருவீர்கள் என்று. மேலும் செலவுகள் குறித்த நல்ல முடிவுகள் நிச்சயம் உங்கள் வாழ்கை பாதையை மாற்றலாம்.  நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், ஓய்வு என்பது நீங்கள் தினசரி அயராது வேலை செய்யும் போது உங்களால் முடியாத அந்த விடுமுறைகளை எடுக்க வேண்டிய நேரமாகும். ஏனென்றால் உங்கள் ஒட்டு மொத்த மன நிம்மதிக்கும் பணம் முக்கியம். நிதி விழுப்புணர் நாளன்று நீங்கள் எங்கு இருக்கீர்கள், நிதி ரீதியாக எங்கு செல்கிறீர்கள் இன்று சற்று சிந்தித்து பாருங்கள். தவறான நிதி முடிவுகள் உங்கள் வாழ்க்கையை அழித்துவிடக்கூடும். 


தேசிய நிதி விழிப்புணர்வு நாள் 


நீங்கள் பணத்தை எவ்வாறு செலவிடுவீர்கள் the 'great gatsby' நாவலில் வருவது போல ஆடம்பரமாக செலவிடுவீர்களா? இல்லை உங்கள் கடைசி கால ஓய்விற்காக சேமிப்பீர்களா?ஆனால் ஒவொரு பைசாவும் எப்படி செலவாகிறது எங்கு போகிறது என்பது  நிச்சயமற்றது? நீங்கள் சம்பளத்தில் தொடங்கி சம்பளத்திலேயே வாழ்கிறீர்கள். உங்கள் நிதி நிலைமை எதுவாக இருந்தாலும் செலவு மற்றும் வரவு பற்றி விழிப்புணர்வுடன் இருக்கவேண்டிய தருணம் இது. இங்கு நம்மில் பலபேர் குடும்ப பட்ஜெட் திட்டமிடலுக்கு தங்கள் பிறந்தநாள் மற்றும் புத்தாண்டு வரை காத்திருப்பது உண்டு, ஆனால் இன்று தொடங்குவதற்கு ஒரு சிறந்த நாள் ஆகும். ஆகஸ்ட் 14 தேசிய விழிப்புணர்வு நாள் மற்றும் தங்கள் எதிர்கால சேமிப்பிற்கு முதலீடு செய்வதற்கான நல்ல நினைவூட்டல் ஆகும்.


பணி ஓய்வு என்பதன் தோற்றம் தெரியவில்லை. ஆனால் அதன் நோக்கம் ஒரு நபர் தற்போது நிதியிலையை உயர்த்துவதும் மற்றும் ஓய்வூதியத்தின் முலம் அவர்களுக்கு சேவை செய்யும் நல்ல நிதி நடைமுறைகளை வளர்ப்பது மற்றும் ஊக்குவிப்பதுமாகும். நாம் ஒரு தொழிலில் முதலீடு செய்வதன் முலம் பணம் நமக்கு வேலை செய்யும், இதனால் குறைந்த நேரம் வேளை செய்ய நேர்ந்திடும், மேலும் நம் வாழ்க்கையை அனுபவிக்க நிறைய நேரம் கிடைக்கும். லாஸ் ஏஞ்சல்ஸின்(Los angeles ) கலிபோர்னியா(california ) பல்கலைக்கழகத்தின் மூத்த கணக்கு ஆசிரியர் டேவிட் ராவெட்ச்(davit Ravetch) கூறுகிறார், "நாங்கள் நிதி கல்வியறிவு இல்லாத உலகில் வாழ்கிறோம்". அவர் சொல்வது என்னவென்றால், தற்போது உள்ள நிதி ஆதாரங்களுடன் தகவலறிந்த மற்றும் பயனுள்ள தகவல் முடிவுகளை எடுக்க தேவையான அறிவும் திறமையும் இங்கு நம்மில் பலபேரிடம் இல்லை என்பதாகும்.


இது மிகவும் ஆபத்தானதாக தோன்றுகிறது, ஆனால் அனைவரும் நிதி கொள்கைகளை கற்றுக்கொள்ளவும் சேமிக்கவும் முடியும். நமது தினசரி வாழ்கை பழக்கத்தில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் பெரும் நிதி நன்மைகளை பெறலாம். முதலீடு அல்லது பண மேலாண்மை கிளப்பில் சேருவது அல்லது நிதி ஆலோசகரை கலந்தலோசிப்பது மற்றும் நிதி பற்றிய புத்தகங்கள் படிப்பது போன்றவை ஊக்குவிக்கபடுகிறது. 


டைம்லைன் (Timeline )


1946-ல் புரூக்ளினில்(Brooklyn) உள்ள வாங்கியலாளரான ஜான் பிகின்ஸ் (john biggins) முதல் வாங்கி அட்டை இன்று நம்பப்படும் 'ஜார்ஜ் இட்'(charge it) கார்டை அறிமுகப்படுத்தினர். 



1950-ல் பிராங்க் மெக்னமாரா(Frank Mcnamara)மற்றும் ரால்ப் ஷ்னைடர்(Ralph schneider) ரொக்கத்திற்கு மறக்க டைனர்ஸ் கிளப் கார்டு(Diner club cards ) அறிமுகப்படுத்தினார். 



அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் தனது முதல் கடன் அட்டையை(credit cards ) 1958 இல் அறிமுகப்படுத்தியது. 


தேசிய நிதி விழிப்புணர் தினத்தின் முக்கியத்துவம் 



  • இங்கு அனைவரின் வாழ்க்கையும் பணத்தை தேடி ஓடுவதிலே முடிந்து விடுகிறது, அந்த காகிதத்தை துரத்தும் முடிவற்ற பந்தயத்தில் நம் எப்போதும் மேல்நோக்கி போகவேண்டிய அவசியமில்லை என்பதை மறந்து விடுகிறோம். சரியான முதலீட்டு நடைமுறைகளால் குறைந்த நேரத்தை செலவழித்தால் அதிக நேரத்தை உங்கள் வாழ்கை பயணத்தை அனுபவிக்க உதவும். 
  • பார்வையற்றவர்கள் தேசத்தில் ஒற்றைக்கண் உள்ளவன் அரசன், அதுபோல, பெரும்பாலான மக்களுக்கு தெரியாத விஷயம் என்றால் அது நிதி. வாழ்க்கையில் கொஞ்சம் நிதி கல்வியறிவு கொண்டிருப்பது மிகவும் அவசியம். இது பலருக்கு கடினமான விஷயமாக உள்ளது. ஆனால் பணம் எப்படி வேலை செய்கிறது என்பதை அறிய முன்முயற்சி எடுத்தல் வேண்டும். 
  • பணத்தால் மகிழ்ச்சி வாங்க முடியாது என்று சொல்கிறார்கள் உண்மைதான், ஆனால் பணம் இல்லாதிருப்பது நிச்சயம் உங்களுக்கு வருத்தத்தை அளிக்கும். அதனாலதான் இப்போது முதலீடு முடிவுகள் எடுப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். வாழ்க்கையில் எந்த வகையில் ஆபத்துகள் தூண்டும் என்று உங்களுக்கு தெரியாது, ஆனால் உங்கள் பாக்கெட்டில் ஒரு நல்ல தற்செயல் முதலீடு  இருப்பதை விட சிறந்த பாதுகாப்பு வலை எதுவும் இல்லை. 

Post a Comment

Previous Post Next Post