ஆண்டுதோறும் இரண்டு முறை வரும் நிழலில்லா நாள் இந்தாண்டு இரண்டாவது முறையாக தமிழகத்தில் இன்று(18-08-2021) நிகழ்கிறது.
ஆண்டுதோறும் இரண்டு நாள் சூரியன் உச்சிக்கு வரும் மதிய நேரத்தில் நமது நிழலை பார்க்க முடியாத அளவுக்கு நிழல் நமது காலின் அடியில் விழும். இதுவே"நிழலில்லா நாள்" என அழைக்கப்படுகிறது.
அந்த வகையில் இரண்டாவது முறையாக சூரியன் உச்சிக்கு வரும் நிழலில்லா நாள் இன்று நிகழ்கிறது. இந்த நிழலில்லா நாள் வருடம்தோறும் ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நிகழும்.
அதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் இந்த நிழலில்லா நாள் வந்தது. அதனையடுத்து இன்று (18-08-2021)இரண்டாவது முறையாக நிகழ்கிறது.
ஓசூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஆவடி, வாணியம்பாடி, கடலூர், ஆம்பூர், ஆரணி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மாமல்லபுரம், கேளம்பாக்கம், வேலூர், ஆற்காடு, ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், அரக்கோணம், சென்னை ஆகிய இடங்களில் நிழலில்லா நாளை இன்று காண முடியும்.
இதுகுறித்து சென்னை கோட்டுர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் நிழலில்லா நாள் குறித்து விளக்கம் அளிக்கவும் காட்சிப்படுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள சென்னை பிர்லா கோளரங்கத்தில் பார்வையாளர்கள் வரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment