August -20 World mosquito day : உலக கொசு தினம் இன்று (20-08-2021)

 உலக கொசுக்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 20 நாள் கடைபிடிக்கப்படுகிறது


August 20 World mosquito day


கொசுக்களுக்காக ஒரு நாள் கடைபிடிப்பதற்கான நோக்கம் என்ன என்பதை நாம் சிந்திக்க வேண்டும். இந்த கொசுக்கள் இல்லாத இடம் இவ்உலகில் இருக்க? அணைத்து இடங்களிலும் நமக்கு இம்சிக்கக்கூடிய சிறு உயிரினம் தான் இந்த கொசு. கடுகு சிறுசானாலும் காரம் குறையாது என்பார்கள். அந்த வகையில் உருவளவில் சிறியதாக உள்ள கொசு மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதில் முதலிடத்தில் உள்ளது. உதாரணமாக மலேரியா, சிக்கன் குனிய, டெங்கு, யானைக்கால் நோய், ஜப்பானிய மூளைகாய்ச்சல், என்சிபாலிடிஸ், ஜிகா வைரஸ் போன்ற நோய்களை ஏற்படுத்துவதில் வல்லமை படைத்தவை இந்த கொசுக்கள். மனிதர்களுக்கிடையே நோயை பரப்பக்கூடிய இந்த கொசுக்களால் மட்டுமே ஒவ்வொரு ஆண்டும் 7 லட்சம் பேர் நோய்வாய்ப்பட்டு இறக்க நேரிடுகிறது. இத்தகைய கொடிய அசுரனான கொசுக்களிடமிருந்து எப்படி நம்மை காத்துக்கொள்ள வேண்டும் என்பதை கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். 


உலக கொசு தினம் 

கொசுக்களின் மூவாயிரம் வகைகள் உண்டு. இதில் மலேரியாவை உருவாக்கும் அனாபெலஸ், டெங்குவை உருவாக்கும் ஏடிஸ், யானைக்கால் நோய், மூளைக்காய்ச்சலை உண்டாகும் குளக்ஸ் ஆகிய மூன்றுதான் கொடியவை.  

World mosquito day

'அனாபெலஸ் பெண் கொசுக்கள் மூலம் மலேரியா நோய் மனிதர்களுக்கு பரவுகிறது' என்பதை, டாக்டர் ரொனால்ட் ரோஸ் 1879 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் நாள் கண்டுபிடித்தார். இதை அங்கீகரிக்கும் விதமாகவும், கொசுக்களின் மூலம் பரவும் நோய்களின் மீது விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் இந்நாள் "உலக கொசு தினமாக" கடைபிடிக்கப்படுகிறது. 

மலேரியா 

மலேரியா பிளாஸ்மோடியம் என்னும் ஒட்டுண்ணியால் பரவும் நோய் ஆகும். பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணி அனபிலிஸ் என்னும் பெண் கொசுவின் வயிற்றில் தொற்றிக்கொள்கிறது. இந்த கொசு ஒருவரை கடிப்பதன் மூலம் இந்த ஒட்டுண்ணியை ஆவர் உடலில் செலுத்தி விடுகிறது. இதன் வழிலாக மலேரியா பரவுகிறது. இது உடலில் கல்லிரலை தாக்குகிறது. பின் இரத்த சிவப்பணுக்களை அழிக்கிறது. சில சமயம் இது மரணத்தையும் ஏற்படுத்தக்கூடும். இந்த அனபெலஸ் கொசுக்களின் 40 க்கும் மேற்பட்ட இனக் கொசுக்கள் உள்ளன. அனபெல்லிஸின் ஒவ்வொரு இனமும் தனித்துவமான நடத்தைகளை கொண்டுள்ளன.

2016 ஆம் ஆண்டில் 91 நாடுகளில் 216 மில்லியன் மலேரியாவினால் பாதிக்கப்பட்ட வழக்குகளும், 4, 45, 000 இறப்புகளை பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதில் முக்கியமாக வளர்ச்சியடையாத கிராமப்புறங்களில் உள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். 

டெங்கு 

டெங்கு இதுவும் கொசுக்களின் மூலம் பரவும் நோய் ஆகும். ஏடிஸ் என்னும் கொசுவினால் பரவக்கூடிய ஒரு வகை வைரஸ் கிருமியால் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. இந்த வகை கொசு மற்ற கொசுக்களைப்போல் இல்லாமல் பகல் நேரங்களில் மட்டும் கடிக்கின்றன. ஒவொரு ஆண்டும் உலகளவில் 6 கோடி பேர் இதனால் பாதிப்படைகின்றனர்,  24,000 பேர் இதனால் இறக்கிறார்கள். ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, கிழக்கு மதிய கடல் பகுதி, தென் கிழக்கு ஆசிய மற்றும் மேற்கு பசுபிக் பகுதிகளில் உள்ள சுமார் 100 நாடுகளில் இது காணப்படுகிறது. 

பாதுகாப்பு வழிமுறைகள் 

  • குப்பைகள் மற்றும் நீர் தேங்கி இருக்கும் இடங்கள்தான் கொசுக்களின் வாழ்விடம். எனவே வீட்டை சுற்றியுள்ள பகுதிகளை சுத்தமாக வைத்திருப்பது அவசியம். 
  • வீடுகளிலோ, வீட்டை சுற்றியுள்ள பகுதிகளிலோ சாக்கடை மற்றும் நீர் தேங்கிய பகுதிகளை சுத்தம் செய்யலாம். 
  • வீடுகளின் கூரைகளில் மழை காலங்களில் நீர் தேங்காமல் வடிவதற்கு வழிவகை செய்யலாம். 
  • கொசுக்கள் வீட்டிற்குள் வராமல் இருக்க ஜன்னல்களில் கொசு வலைகளை அடித்து வைக்கலாம். 
  • டயர்கள், தகரங்கள், பாலிதீன் பைகள் போன்றவற்றில் மழை நீர் தேங்காமல் அப்புறப்படுத்த வேண்டும்.
  • தண்ணீர் தொட்டிகளை மூடிவைக்க வவேண்டும். 
  • தண்ணீர் பாத்திரங்களை சுத்தமாக கழுவி தலைகீழாக வெயிலில் காயவைக்க வேண்டும். 

கொசுக்களை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் 

  • சராசரியாக ஒரு கொசுவின் எடை 25 மில்லி கிராம். 
  • ஒரு மணி நேரத்துக்கு 1 முதல் 1.5 மைல்கல் மட்டுமே பறக்க முடிந்த கொசுக்களுக்கு ஆறு கால்கள் உள்ளன. 
  • கொசுக்கள் கடிக்கிறது என்போம் ஆனால் கொசுக்களுக்கு பற்கள் கிடையாது. 
  • இரண்டு மாதங்கள் மட்டும் ஆயுட்காலம் கொண்ட கொசுக்கள் டைனோசர் காலம் முதல் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. 
  • பெண் கொசுக்கள்தான் இரத்தத்தை குடிக்கும். 
  • பெண் கொசுக்கள் ஒரே நேரத்தில் 300 முட்டைகளை இடும் தன்மை கொண்டவை. 
  • கொசுக்கள் அவற்றின் எடையை விட மூன்று மடங்கு இரத்தத்தை குடிக்கின்றன. 
  • கொசுக்களும் உறங்கும் 
  • கொசுக்கள் தங்கள் முதல் 10 நாட்களை தண்ணீரில் கழிகின்றன. 
  • உலகில் 3, 500 க்கு மேற்பட்ட கொசு இனங்கள் இருந்தாலும் இவற்றில் 200 முதல் 300 இனங்கள் மட்டுமே கடிக்கும் தன்மை கொண்டவை. 
  • கொசுக்கள் கடித்தால் ஏற்படும் வீக்கம் அவற்றின் உமிழ் நீரினால் உண்டாகிறது. 
  • கொசுக்கள் மனிதர்களிடமிருந்து மட்டும் இரத்தத்தை உறிஞ்சிவதில்லை, அவை பறவைகள் மற்றும் கால்நடைகளிடமிருந்தும் இரத்தத்தை உறிஞ்சிக்கின்றன. 

Post a Comment

Previous Post Next Post