ஷரியத் சட்டம் என்றால் என்ன? தாலிபான்கள் ஆட்சில் பெண்கள் எவ்வாறு நடத்தப்பட்டனர்? தலிபான்களின் பெண்ணியல் அணுகுமுறை எவ்வாறு இருக்கும்?
தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய நிலையில், ஆச்சி அமைப்பதற்கான அணைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகின்றனர். இனி தாலிபன்கள் ஆட்சிதான் இங்கு நடக்கும் என கூறிய நிலையில் அங்குள்ள பெண்கள் அனைவரும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். தாலிபன்கள் முன்னதாக 1996-2000 இல் ஆப்கானில் ஆட்சி செய்த போது இந்த ஷரியத் என்ற சட்டம் அமுல்படுத்தப்பட்டு பெண்கள் பல அநீதிகளுக்கு உள்ளாக்கப்பட்டனர் என கூறப்படுகிறது. எனவே, ஆப்கானை கைப்பற்றிய தாலிபன்களால் மீண்டும் இந்த ஷரியத் சட்டம் அமுல்படுத்தப்படும் என்று மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இதனிடையே தாலிபன் தலைவர்களுள் ஒருவரான வஷிதுல்ல ஹஷிமி (waheedhullah hashimi) ஓர் செய்தி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "ஆப்கானிஸ்தானில் ஜனநாயகரீதியான ஆட்சிக்கு இடமில்லை. எங்களிடம் ஷிரியத் சட்டம் உள்ளது." அதன் படித்தான் ஆட்சி நடக்கும் என கூறியிருக்கிறார்.
ஷிரியத் சட்டம் என்றால் என்ன? தாலிபன் ஆட்சி காலத்தில் பெண்கள் எவ்வாறு நடத்தப்பட்டனர்? தாலிபன்களின் பெண்ணியல் அணுகுமுறை எவ்வாறு இருக்கும் என்பதை குறித்து இதில் கான்போம்.
ஷரியத் சட்டம்
ஷிரியத் சட்டம் என்பது இஸ்லாமிய சட்ட முறையாகும். இது இஸ்லாமிய மதத்தை பின்பற்றும் ஓர் இஸ்லாமியர் எப்படி வாழ வேண்டும் என்பதை வகுக்கும் வாழ்வியல் முறையாகும். இது தனிப்பட்ட ஓர் நபரால் எழுதப்பட்ட சட்ட வடிவிலான புத்தகம் அல்ல, இது குரான் மற்றும் நபிகள் நாயகம் அவர்களில் வாழ்கை முறை ஆகியவற்றில் இருந்த எடுக்கப்பட்டவை ஆகும்.
ஷரியத் என்பது ஒரு அரபு சொல். இதற்கு 'நேரான பாதை' என்பது பொருள். இந்த சட்டத்தின் அடிப்படையில் அணைத்து இஸ்லாமியர்களும் கட்டாயம் தொழுகை seivathue, ஏழைகளுக்கு உதவுவது, நோம்பு இருப்பது என வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுக்கு இதில் கூறப்பட்டுள்ளது. அதேபோல், இச்சட்டத்தை மீறுவோர்க்கு enna தண்டனை வழங்க வேண்டும் என்பதும் இதில் கூறப்பட்டுள்ளது.
இச்சட்டம் தற்போது உலகில் ஈரான், சவுதி அரேபிய, கத்தார் போன்ற நாடுகளில் நடைமுறையில் உள்ளன. ஆனால் இது ஷிரியாவின் அணைத்து சட்டங்களையும் நடைமுறை படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தாலிபான்களை பொறுத்தவரை ஷிரியத் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். ஷிரியாவின் படி குற்றம் செய்தவருக்கு பொது இடத்தில் வைத்து தண்டனை கொடுப்பது, சவுக்கடி கொடுப்பது போற்றவற்றை இன்றளவும் நடைமுறை படுத்தவேண்டும் என நினைப்பவர்கள்.
குற்றங்களும் தண்டனைகளும்
ஷிரியத் சட்டப்படி குற்றங்கள் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை,
- தாஅசீர் ( சிரியவகை குற்றங்கள் )
- கிஸஸ் ( பழிக்கு பழி வாங்குதல் )
- ஹிதூத் ( கிரிமினல் குற்றங்கள் )
தாஅசீர் (சிரியவகை குற்றங்கள்)
தஆசீர் என்றால் சிறுவகை குற்றம் என வரையறுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக ஒருவன் திருடுவதற்கு முயன்றான் ஆனால் அதற்குள் பிடிபட்டுவிட்டான், பிடிபடாவிட்டால் திருட்டை நடத்திருப்பான் என நிரூபிக்கப்பட்டால் அது 'அஆசீர்' பிரிவின் கீழ் வரும். திருடவில்லை என்றாலும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டான். அவனை விட்டுவிட்டால் மீண்டும் இதுபோன்ற தவறை செய்வான், எனக்கருதி அவனை சமூகத்தில் இருந்து அப்புறப்படுத்துவதுதான் தஆசீர் வகை தண்டனை சட்டம்.
இதில் பொய் சாட்சி கூறுதல் போன்றவையும் அடங்கும். அதாவது ஒருவர் கூறும் பொய் சாட்சியால் மற்றவருக்கு எந்த பாதிப்பும் ஏற்பட வில்லை என்றால் தண்டனை கிடையாது. அதுவே ஆவர் கூறும் பொய்யினால் ஒருவருக்கு பொருளாதார ரீதியாகவோ அல்லது சமூகத்தில் பாதிப்பு ஏற்படுமேயானால் அதனை குற்றமாக கருதி அதற்கான தண்டனை வழங்கப்படும். அதாவது, தஆசீர் வகை குற்றங்களுக்கு சமூகத்தில் இருந்து அப்புறப்படுத்தப்படும் தண்டனை வழங்கப்படும்.
முந்திய காலங்களில் இந்த வகை குற்றங்களுக்கு குற்றவாளிகளை சமூகத்தில் இருந்து அப்புறப்படுத்தும் விதமாக நாடு கடத்தப்பட்டனர். தற்போது, ஷிரிய நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சமூகத்தில் இருந்து அப்புறபடுத்தும் விதமாக சிறையில் தள்ளப்படுகின்றனர். அங்கு அவர்களுக்கு ஒழுங்கு வகுப்புகளும், கவுண்டிலிங் கொடுக்கப்படும் இதன் மூலம் அவர்கள் திருந்தியதாக நீதிபதி உறுதியளித்தல், சமூகத்தில் கலந்து வாழ அனுமதி வழங்கப்படும்.
கிஸஸ் (பழிக்கு பழி வாங்குதல்)
கிஸஸ் என்றால், ஒருவர் அநீதிக்கு உள்ளாக்கப்பட்டால் அதே அளவுக்கு அநீதி குற்றம் செய்தவருக்கும் கொடுப்பது ஆகும். உதாரணமாக ஒருவர் ஒருவரை கொலை செய்துவிட்டால், அதனால் பாதிக்கப்பட்டவர் நீதிமன்றத்தை அணுகி சட்டரீதியாக கொலை செய்தவரின் உயிரை எடுப்பதுதான் இந்த வகை குற்றங்களுக்கு தண்டனை ஆகும். மாறாக பாதிக்கப்பட்டவர் மன்னிக்கவும் செய்யலாம். அப்படி மன்னித்தால் நீதிமன்றம் அதை ஏற்று கொலை செய்தவருக்கு எந்த தண்டனையும் தராமல் விடுவிக்கும்.
ஹிதூத் (கிரிமினல் குற்றங்கள்)
ஹிதூத் என்பது கிரிமினல் வகைக் குற்றங்களுக்கான தண்டனை ஆகும். ஒருவன் சாதாரணமாக திருட்டில் ஈடுபட்டால் இந்த சட்டத்தின் கீழ் வராது, ஆனால் எல்லையை தாண்டி பெரிய அல்லது தொடர் திருட்டுகளில் ஈடுபடுவோர்க்கு, ஷிதூர் சட்டத்தின் படி அவரது கைகளை மாணிக்கட்டுடன் வெட்டப்பட்டு தண்டனை வழங்கப்படுகிறது.
மது அருந்துதல், ஆபாசப்படம் பார்த்தால் போன்றவை இந்த சட்டத்தின் கீழ் வரும். இஸ்லாமிய மதத்தில் மது அருந்துதல் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே மது அருந்துவருக்கு 80 கசையடி தண்டனையாக வழங்கப்படும். விபச்சாரம் செய்தால் போன்றவையும் இதில் அடங்கும். திருமணத்திற்கு முன் விபச்சாரத்தில் ஈடுபட்டால், ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் 100 கசையடி வழங்கப்படும். இதுவா திருமணம் முடிந்து விபச்சாரத்தில் ஈடுபட்டால் மரண தண்டனை வழங்கப்படும்.
மேலும் பாலியல் ரீதியாக இவன் இவளோடு இருந்தான் என ஆதாரமின்றி பொய் புகார் குறி அது நிரூபிக்கப்படவில்லை என்றால், அவதூறு கூறியவர்க்கு 80 கசையடி தண்டனையாக வழங்கப்படும்.
மேல குறிப்பிட்ட மூன்றும்தான் ஷிரியத் சட்டத்தில் கூறப்பட்டுள்ள தண்டனைகள் ஆகும். இது இஸ்லாமிய மதத்தை பின்பற்றுவோருக்கு மட்டும் பொருந்தும். இஸ்லாமிய நாடுகளில் வாழும் பிற மதத்தவருக்கு இந்த சட்டம் பொருந்தாது.
தலிபான்களின் பெண்ணியல் அணுகுமுறை
தாலிபான்கள் ஆப்கனிஸ்தானை ஆட்சி செய்தபோது, அவர்களில் பெண்ணியல் அனுகுமுறை சர்வதேச அரங்கில் மோசமான பெயரை பெற்றிருந்தது. எட்டு வயது முதல் பெண்கள் பொது இடங்களில் கட்டாயமாக பர்தா அணிய வேண்டும். இரத்த உறவினர் யாராவது உடன் இல்லாமல் பெண்கள் வெளியே வர கூடாது. பெண்கள் குதிகால் உயரமான காலணிகளை அணியக்கூடாது, பொது இடங்களில் உரக்க பேசக்கூடாது. என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது.
தெருக்களில் இருந்து விட்டிற்குள் உள்ளது பெண்கள் பார்க்கப்படுவதை தடுக்க ஜன்னல்கள் திரையிடபட்டு இருக்க வேண்டும். பெண்கள் புகைப்படம் எடுப்பதோ வீடியோ எடுப்பதோ தடை செய்யப்பட்டிருந்தது. அதே போன்று, பத்திரிகை, புத்தகங்கள் விளம்பரங்கள் போற்றவற்றில் பெண்கள் புகைப்படம் வெளியிடுவது தடை செய்யப்பட்டிருந்தது. பெண்கள் என்ற பெயர் கொண்ட இடத்தின் பெயரும் மாற்றப்பட வேண்டும், பெண்கள் தங்களது பால்கனியில் நிற்பது தடை என பல மோசமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.
இதனை மீறுவோருக்கு தண்டனைகளும் மிக கடுமையாக விதிக்கப்பட்டிருந்தது. தண்டனைகள் பெரும்பாலும் பொது இடங்களில் வைத்தே தரப்பட்டது. பார்வையாளர்கள் கூட்டத்துடன் ஒரு விளையாட்டு மைதானத்திலோ அல்லது நகர மையங்களில் தண்டனைகள் வழங்கப்பட்டது. தெரு அடி உதையும் இதில் அடங்கும். இத்தகைய கொடியரமான தண்டனைகளுக்கு பயந்தே மக்கள் வாழ்ந்து வந்தனர். ஏனெனில் கருணை என்பது அவர்களிடம் இல்லை.
உதாரணமாக, 1996 ஆம் ஆண்டு காபூலை சேர்ந்த பெண் ஒருவர் தனது விரலில் நெய்ல் பாலிஷ் போட்டுருந்ததன் காரணமாக அவரது விரல்களை தாலிபான்கள் துண்டித்ததாக கூறப்படுகிறது.
தலிபான்களின் தற்போதைய நிலைப்பாடு
தாலிபான்கள் ஆப்கானை கைப்பற்றிய பின், அவர்கள் ஆட்சி அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். தலிபான்களின் செய்தி தொடர்பாளர் செய்தியாளர்களிடம் இனி ஆப்கானில் பெண்களுக்கான உரிமைகள் வழங்கப்படும். முன்னர் நடந்தது போல நடக்காது. பெண்கள் கல்வி கற்க எவ்வித தடையும் இல்லை. அவர்கள் கட்டாயம் பல்கலைக்கழக படிப்பு வரை படிக்கலாம். பர்தா அணிவது கட்டாயம் இல்லை என கூறியுள்ளார். இந்நிலையில் இந்த உறுதிமொழி காப்பாற்றப்படுமா இல்லை காற்றில் பறக்கவிடபடுமா என்பது போகபோகத்தான் தெரியும்.
إرسال تعليق