இனி வாட்ஸ்அப்பில் COVID-19 தடுப்பூசி முன்பதிவு செய்து கொள்ளலாம்? Book vaccine slot on whatsapp

 COVID-19 தடுப்பூசி செலுத்த விரும்புபவர் வாட்ஸ்அப் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என ஒன்றிய அரசு சுகாதாரத்துவ அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார்.


Book vaccine slot on whatsapp, whatsapp, vaccine, covid-19


நாடு முழுவதும் கொரோன பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் முக்கிய நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல் உள்ளது. தமிழம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த ஒன்றரை அடண்டுகளுக்கு மேலாக கொரோனாவின் பிடியில் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டும் பலியாகியும் உள்ளனர். இந்த கொடிய அசுரனான கொரோன வைரஸ் இடமிருந்து மக்களை காப்பாற்ற ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் தடுப்பூசி போட்டுக்கொள்வது மிகவும் அவசியம் என்று அறிவுறுத்தி வருகிறது. ஒன்றிய அரசு மாநில அரசுகளுக்கு தடுப்பூசிகளை அனுப்பி வைக்கிறது. மாநில அரசு தனது மாநிலங்களின் மாவட்டங்களுக்கு தடுப்பூசிகளை பிரித்து அனுப்பி வைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மாநிலங்களின் பல பகுதிகளில் கொரோன தடுப்பூசி மையம் அமைக்கப்பட்டு அணைத்து மக்களுக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தியாவில் கொரோன வைரஸின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவரமாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கோவாக்ஸின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு செலுத்தப்பட்டு வருகிறது.  தற்போது 18 வயதிற்கு மேற்பட்ட அனைவர்க்கும் இந்த இரண்டு தடுப்பூசிகளில் ஓன்று போடப்பட்டு வருகிறது. இதுவரை 42 கோடிக்கும் அதிகமானோர் தடுப்பூசி போடப்பட்டுள்ளனர். 


இந்த நிலையில் ஏற்கனவே இணையதளம் மூலம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவித்த நிலையில்,  தற்போது வாட்ஸ்அப் மூலமும் கொரோன தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்பதிவு செய்துகொள்ளலாம் என ஒன்றிய அரசு அமைச்சர் மன்சுக் மாண்டாவிய(Munsukh mandaviya) அவர்கள் தனது டுவிட்டர் பாகத்தில் தெரிவித்துள்ளார்.


Mansukh mundaviya, covid-19
Mansukh Mandaviya


அவரின் பதிவில்..... "குடிமக்களின் வசதிக்காக ஒரு புதிய சகாப்தத்தை நமது அரசு உருவாகியுள்ளது. இப்போது, சில நிமிடங்களில் உங்கள் தொலைபேசியின் வாழிலாக கோவிட் 19 தடுப்பூசி மையங்களை அறிந்து எளிதாக பதிவு செய்யுங்கள். Mygov india corona helpdesk நம்பருக்கு Book slot என்று மெஜேஸ் அனுப்புங்கள்.  வாட்ஸ்அப்பில் OTP சரிபார்க்கும் வழிமுறைகளை பின்பற்றி பயனடையுங்கள்... "என்று குறிப்பிட்டுள்ளார். 


Mygov india corona helpdesk

வாட்ஸ்அப்பில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் Mygov india helpdesk என்ற சேவை கொரோன தொற்றின் உண்மையான நிலையையும், COVID-19 தொடர்பான செய்திகளுக்கு பதிலளிக்கவும், பாதிக்கப்பட்டவர் மற்றும் இறந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை தெரிந்து கொள்ள உருவாக்கப்பட்டது. இதில் தற்போது தடுப்பூசி செலுத்த முன்பதிவு செய்யவும், தடுப்பூசி செலுத்தப்பட்ட சான்றிதழை பதிவிறக்கம் செய்யவும் புதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 

வாட்ஸ்அப்பில் தடுப்பூசி செலுத்தும் இடத்தை எவ்வாறு பதிவு செய்வது? Book vaccine slot on whatsapp 

Book vaccine slot on whatsapp, whatsapp,

படிநிலைகள் :
  1. பயனாளர்கள் 9013151515 என்ற வாட்ஸ்அப் நம்பரை தங்கள் தொலைபேசியில் சேமிக்க வேண்டும். 
  2. 'Book slot' என்று டைப் செய்து வாட்ஸ்அப்பில் சேமித்த நம்பருக்கு அனுப்பவும். அது அந்த கைபேசி எண்ணிற்கு ஒரு OTP உருவாகும். அதனை நீங்கள் சாட்டில் டைப் செய்யது அனுப்பவும். 
  3. உங்கள் 6 இலக்க OTP நீங்கள் அனுப்பிய உடன், தடுப்பூசி இடத்தை பதிவு செய்ய விரும்பும் நபரின் தொலைபேசி எண், அஞ்சல் எண், தடுப்பூசி போட விரும்பும் நாள் மற்றும் இடம் ஆகியவற்றை தேர்வு செய்ய வேண்டும். 
  4. பின்னர் தடுப்பூசி பதிவு உறுதியானதர்கானா மெஜேஸ் உங்களுக்கு வரும். 
இவ்வாறு பதிவு செய்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். 

Post a Comment

أحدث أقدم