மின்சார சந்தையில் அதிக எதிர்பார்புகளை ஏற்படுத்தி உள்ள ஓலா மின்சார ஸ்கூட்டரின் சிறப்பம்சங்களை பற்றி இதில் காண்போம்.
வாடிக்கையாளர்கள் வெறும் 499 ரூபாயை முன்பணமாக செலுத்தி, ola electric scooter-ஐ முன்பதிவு செய்து கொள்ளலாம் என்ற அறிவுப்பு வெளிவந்த 24 மணி நேரத்திற்குள் 1 லச்சத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். அத்துடன், ஆயிரத்திற்கும் மேற்பட்ட நகரங்களில் இருந்தும் ola electric scooter-க்கு முன்பதிவு குவிந்துள்ளது.
மேலும், ola electric நிறுவனம் இந்தியா முழுவதும் சார்ஜிங் ஸ்டேஷன் வசதியை வழங்க உள்ளது. எனவே, சரியான விலையில் அறிமுகம் செய்யப்பட்டால் Ola electric scooter நிச்சயம் இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.
வழக்கமாக ஸ்கூட்டரில் இருக்கும் அனலாக் இன்ஸ்டூமெண்டல் க்ளஸ்டரின் இடத்தில் மிக பெரிய டச்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் MoveOS மூலம் இயங்குகிறது.
இந்த ஸ்கூட்டர் reverse greer உடன் வருகிறது. இதனால் பார்க்கிங் செய்வதில் பெரும் உதவியாக இருக்கும். மேலும், இதில் Hill hold Assist (HSA) உள்ளதால் தாழ்வான பகுதிகளில் நிறுத்த உதவும்.
Ola electric scooter s1 தேர்ந்தெடுக்கப்பட்ட சவாரிகளின் அடிப்பைடயில் பல்வேறு ஒலிகளை எழுப்பும்.
Ola electric scooter S1 10 வண்ணங்களில் வரும். மற்றும் இரண்டு helmet வைக்கும் அளவிற்கு பெரிய பூட் ஸ்பேசுடன் இந்த ஸ்கூட்டர் உள்ளது.
இந்த ஸ்கூட்டரின் சில அம்சங்களை மொபைல் செயலி மூலம் இயக்கலாம்.
Ola electric scooter S1 வெறும் 18 நிமிடங்களில் 50% சார்ஜ் செய்ய முடியும். இதுவே பூஜ்யத்தில் இருந்து முழுவதுமாக சார்ஜ் செய்ய இரண்டு மணி நேரம் ஆகும்.
ஆரம்பத்தில் ola electric scooter முழுவதுமாக சார்ஜ் செய்தால் 240 கி.மீ தூரம் பயணிக்கும் என யூகங்கள் கிளம்பின. ஆனால் இதன் ரேஞ்ச் 150 கிமீ என ஓலா நிறுவனம் உறுதிப்படுத்துயுள்ளது.
إرسال تعليق