15-08-2021 இன்று நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை நாம் கொண்டாடி வருகிறோம். 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து இந்தியா விடுதலை அடைந்து தனி நாடானதை போற்றும் விதமாக ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 15 ஆம் நாள் சுதந்திர நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தநாள் நாம் புதிய தேசத்தின் உதய நாள், புதிய தொடக்கத்திற்கான தொடக்க நாள் என்று சொன்னால் மிகையாகாது,ஏனென்றால் தற்போது நாம் சுதந்திர காற்றை சுவாசித்து கொண்டிருக்கின்றோம் என்றால் அதற்கு காரணம் நூற்று கணக்கான ஆன்மாக்கள் மற்றும் ஆயிரக்கணக்கார புரட்சியாளர்களின் தியாகமே ஆகும். இந்த நாளில் நாடு முழுவதும் தேசிய கோடி ஏற்றப்பட்டு சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்படும்.
தொடக்க கால இந்தியா
'தீபகற்பம்' என்றும் 'பாரத தேசம்' என்றும் அழைக்கப்படும் நம் நாடு மேற்கே பாக்கிஸ்தான், கிழக்கே வங்காள தேசம் என பெருவாரியான பரப்பளவைக் கொண்ட ஒரே தேசமாக இருந்தது. மன்னர் ஆச்சி காலத்தில் மிகவும் செழிப்பாகவும், பசுமையாகவும் இருந்த நம் நாடு, உலகின் அணைத்து நாடுகளுக்கும் செம்மசொப்பனமாக இருந்தது. தென்னிந்தியாவை சேர, சோழ, பாண்டியன் என மும்மணர்கள் ஆச்சி செய்து தென்னிந்திய பெருமையை உலகம் முழுவதும் பரவா செய்தனர். இலாமியர்கள் (1206-1707), டெல்லி சுல்தான்கள் (1206-1526), தக்காணத்து சுல்தானகம் (1490-1596), விஜய நகர பேரரசு (1336-1646), முகலாய பேரரசு (1526-1803), மராட்டிய பேரரசு (1747-1823), சீக்கிய பேரரசு (1799-1849), என பலரும் நம் நாட்டின் செல்வாக்கையும் பெருமையையும் உலகறிய செய்வதில் கவனமாக இருந்தனர்.
மேலைநாட்டவரின் வருகை
விஜய நகர பேரரசு காலத்தில் முதன் முறையாக இந்தியாவிற்கு கடல் வழியில் வந்தவர் வாஸ்கோடகாமா, ஆவர் ஒரு போச்சேகிச்சியார் ஆவார். இவர் வருகையை தொடர்ந்து, இந்தியாவில் உணவிற்கு சுவர் சேர்க்கும் மசாலா பொருள்கள் இருப்பதை அறிந்த ஐரோப்பியர்கள், அதனை தங்கள் நாட்டிற்கு விற்பனை செய்யும் வணிக நோக்கத்துடன் கோழிக்கோடு துறைமுகத்திற்கு 1498 இல் வந்தனர். போர்ச்சுகீசியர்களும் இந்தியாவின் கடலோர பகுதிகளான கோவா, டியூ, டாமின், பாம்பே போன்ற இடங்களில் தங்கள் வணிக முகாம்களை அமைத்தனர்.
இவர்களை தொடர்ந்து டச், ஆங்கிலயர்கள் போன்ற அந்நியர்கள் நம் நாட்டிற்குள் வந்தனர். ஆங்கிலேயர்களும், போர்ச்சுகீசியர்களை போலவே, வணிக முகாம்களை அமைக்க திட்டமிட்டு, சூரத்தின் வடக்கு கரையோரத்தில் வணிக முகாம்களை நடத்தினர். 1619 ல் பிரஞ்சுகாரர்களும் அவர்களை பின் தொடர்ந்தனர். வணிகம் என்ற பெயரில் ஒவ்வொரு நாட்டிற்குள்ளும் நுழையும் ஐரோப்பியர்கள், நாட்கள் செல்ல செல்ல அந்நாட்டு சிம்மாசனத்தை கைப்பற்றுவர். அதற்கேற்ப பல அந்நியர்கள் இந்தியாவிற்குள் வந்ததால், பல போர்களும் குழப்பமான சூழ்நிலைகளும் இருந்ததால் ஐரோப்பியர்களின் ஆதிக்கம் இந்தியாவில் அதிகமானது. ஆனால், தாங்கள் கைப்பற்றிய அணைத்து நாடுகளையும் ஒரே நூற்றாண்டில் ஆங்கிலேயர்களிடம் இழந்தது.
கிழக்கிந்திய கம்பெனி
ஐரோப்பியர்களை வென்ற ஆங்கிலேயர்கள், இந்தியாவில் வணிகம் செய்ததோடு மட்டுமல்லாமல், அப்போதைய முகலாய பேரரசரான ஜகாங்கீரினுடைய அனுமதியுடன் இந்தியாவை தலைமை இடமாக கொண்ட ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியை நிறுவினார். நாளடைவில் அவர்கள் வரி செலுத்தாமல் வாணிபம் செய்ததால் வங்காளத்தின் நவாப் ஜிராத் உத் துலாக் எதிர்த்ததால் 1757 ஆம் ஆண்டு பிளாசி போர் ஏற்பட்டது.
இதில் நவாப் தோல்வியுற்றதால், ஆங்கிலேயர்கள் இந்தியாவில் உள்ள நிலங்களை ஆக்கிரமிக்க துவங்கினர். இதனையடுத்து 1764 ஆம் ஆண்டு பாக்சர் போரில் வெற்றி பெற்று வங்காளத்தை ஆச்சி செய்ய அனுமதி பெற்றதால், இந்தியா முழுவதும் ஆங்கிலேயர் கட்டுப்பாட்டிற்குள் வர அதுவே முக்கிய காரணமாக இருந்தது. இதன் பின்னர் வரிகள், நிலங்கள் கைப்பற்றுதல், பிளக் பாண்டமிக் போன்ற கொடிய நோயால் இந்தியர்கள் கொத்து கொத்தாக மடிந்தனர். இதனை கண்டு வெகுந்தெழுந்த இளைனர்கள் 1857ஆம் ஆண்டு 'இந்திய கலக்கம்' என்ற இயக்கத்தை முகலாய பேரரசர் பகதூர் ஷ சபர் அவர்களை தளபதியாக கொண்டு உருவாக்கினார். இதுவே 'முதல் இந்திய போர்' என்றழைக்கப்பட்டது.
ஆங்கிலேயர்களின் ஆதிக்கம்
முதல் இந்திய போருக்கு பிறகு ஆங்கிலேயர்கள் தங்கள் ஆதிக்கத்தை நேரடியாக செலுத்த தொடங்கினார்கள். என்னதான் ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தாலும் ஒருபுறம் நம் இந்தியர்கள் முதல் இந்திய போருக்கு பிறகு பல போராட்டங்களும் கிளர்ச்சிகளும் பல தலைவர்களால் முன்னெடுத்து நடத்த்ப்பட்டன.
முதல் உலகப்போருக்கு இந்தியர்கள் துணிவும்
உலகில் உள்ள நாடுகளுக்கிடையேயான விரோத போக்குகளால் 1914 ஆம் ஆண்டு முதல் உலக போர் ஆரம்பமானது, ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சிசெய்து கொண்டிருந்ததால், அவர்களது போர் முயற்சிக்கு இந்திய பெருமளவு பங்குவகித்தது. முதல் உலக போரின் பின்கிளைவுகளாக, பெரும் உயிர் இழப்பு, உயர்ந்த பணவீக்கம், பரவிய இன்புளூயன்ஸ் மற்றும் போரின் போது ஏற்பட்ட வர்த்தக பாதிப்புகள் இந்திய மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் பிரித்தானிய ஆட்சியை தூக்கியெறிய இந்தியர்கள் முன்வந்தனர்.
இச்சமயம், 1915 ஆம் ஆண்டி, தென்னாப்பிரிக்காவில் நிறவெறி எதிர்ப்பு இயக்கத்தின் முக்கிய தலைவராக இருந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி இந்திய வந்தார். இந்திய மக்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்ததால் 1918 ல் கருப்பு சட்டம் என்ற ரவுலட் சட்டத்தை ஆங்கிலேயர்கள் கொண்டு வந்தனர். இதன் மூலம் பத்திரிகைகளை முடித்தால், விசாரணையின்றி அரசியல் செயல்பாடுகளை நசுக்குதல், கைத்தானை இல்லாமல் கலக்கம் அல்லது ராஜதுரோகம் செய்வதாக கருதப்படும் நபர்களை கைது செய்தால் போன்ற அக்கிரமங்களை அதிகாரம் என்ற பெயரில் துஷ்ப்ரயோகம் செய்தனர். மேலும் 1919 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜாலின் வாலாபாக் படுகொலை, 1920 ஆம் ஆண்டு 'கிலாபாத்', 'ஒத்துழையாமை இயக்கம்', 'காமினிட்ஸ் கட்சி', அகில இந்திய 'தொழிற்சங்க காங்கிரஸ்' போன்றவை உருவாக காரணமானது.
தண்டி யாத்திரை |
முதல் சத்தியாகிரக இயக்கத்தை தொடங்கி காந்தியடிகள் ஆங்கிலேயர்களை எதிர்த்ததால், 1922 ல் ஆறுவருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் இரண்டு வருடங்களில் விடுதலையும் செய்யப்பட்டார். 1929 ஆம் ஆண்டு பகத் சிங், டெல்லி பாராளுமன்றத்தில் குண்டு வீசினர். இதை கடுமையாக எதிர்த்த காந்தியடிகள், 'அமைதியால் மட்டுமே சுதந்திரம் அடைய முடியும்' என எண்ணி, 1930ல் தண்டி யாத்திரை என்னும் உப்பு சத்யாகிரகத்தை நடத்தினர். அப்போதுதான் முதல் வட்ட மேசை மாநாடு நடத்தப்பட்டது. அடுத்த ஆண்டே காந்தி-இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தானதோடு, இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் ஆவர் இந்திய பிரதிநிதியாக கலந்துகொண்டார். அதே ஆண்டுதான் ஆங்கிலேயர்களை எதிர்த்த, பகத் சிங், ராஜகுரு மற்றும் சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்டார்.
இரண்டாம் உலகப்போரில் இந்தியர்கள் கலந்து கொண்டனர். மேலும் 1940 இல் தனிநபர் சத்தியாகிரகம், 1942 இல் வெள்ளையனே வெளியேறு இயக்கம் போன்றவை உருவானது. 1942இல் நேதஜி இந்திய ராணுவத்தை உருவாக்கினார்.
இந்தியா சுதந்திரம் அடைதல்
1947-ல் சுதந்திரம் அடைந்தபோது |
சுதந்திரத்திற்காக பல போராட்டங்களும், கிளர்ச்சிகளையும் எழுப்பிய தலைவர்களும் புரட்சியாளர்களும் சிறிதளவும் கலைப்படையவில்லை. பல போராட்டங்களுக்கு பிறகு 1947 ஆம் ஆண்டு பிரித்தானிய இந்திய கவர்னல் ஜெனரல் விஸ்கவுன்ட் லூயிஸ் மௌண்ட்பேட்டன் அவர்கள், ஜூன் 3 ஆம் தேதி அன்று பிரித்தானிய இந்திய பேரரசை மதசார்பற்ற இந்தியா என்றும் முஸ்லிம்கள் பாக்கிஸ்தான் என்றும் பிரித்தளிப்பதாக அறிவித்தார். இந்த தேசப் பிரிவினையால் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 இல் பாக்கிஸ்தான் தனி நாடாக பிரிந்துசென்றது. மேலும், இந்தியா 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் நள்ளிரவில் சுதந்திர தேசமானது.
ஜவஹர்லால் நேரு |
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேருவும், துணை பிரதமராக சர்தார் வல்லபாய் பட்டேலும் பதவியேற்றார் . அவர்கள் இந்தியாவில் கடைசி கவர்னல் ஜெனரலாக இருந்த மவுண்ட் பேட்டனை அதே பதவியில் தொடரும்படி அழைத்தனர். எனவே அவரும் சிறிது காலம் பதவியில் இருந்தார். பின்னர் 1948 ஆம் ஆண்டு ஜீனில் சக்கரவத்தி ராஜாகோபாலச்சாரி ஜெனரலாக பதவியேற்றார்.
சுதந்திர தின கொண்டாட்டங்கள்
ஆகஸ்ட் 15 ஒவ்வொரு ஆண்டும் இந்தியா சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தந்த மாவட்ட ஆச்சி தலைவர்கள் தேசிய கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்குவார்கள்.
பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தேசியக்கொடி ஏற்றி கலை நிகழ்ச்சிகளும், பேச்சி போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டி என பல போட்டிகள் நடத்தி பரிசு மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடுவர். டெல்லில் கோலாகலமாக கொண்டாடப்படும் இத்தினத்தில், நாட்டின் பிரதமர் செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி, மக்களுக்கு உரையாற்றுவார். ஒவ்வொருவரும் ஒருவர்க்கொருவர் தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்வர்.
ஜாதி, மதம்,இனம், மொழி என்னும் வேறுபாடுகளை கலைத்து மதசார்பற்ற இந்தியாவில் அனைவரும் சமம் என்ற எண்ணத்தோடு, பல உயிர்களை தியாகம் செய்து கிடைத்த இந்த சுதந்திர காற்றை பெருமையுடன் சுவாசிப்போம்.
அனைவர்க்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.... !
إرسال تعليق