1976 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 13 ஆம் நாள் இடதுகை பயன்படுத்துவரின் தனித்தன்மை மற்றும் வேறுபாடுகளை கொண்டாடும் வகையில் சர்வதேச இடதுகை பயன்படுத்துவோர் நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. சர்வதேச இடதுகை பயன்படுத்துபவர் கிளப் இத்தினத்தை கடைபிடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது டீன் ஆர்.கேம்ப்பெல்(Campbell) என்பவரால் நிறுவப்பட்டது. ஐ.நா அறிக்கையின்படி உலக மக்கள்தொகையில் 13% சதவீத மக்கள் இடதுகை பயன்படுத்துவராக உள்ளனர் என்கிறது.
மேலும், 1990 ஆம் ஆண்டு இடதுகை பழக்கத்தவர்கள் ஒன்றிணைந்து இடதுகை திறனை ஊக்குவிக்கும் வகையில் இடதுகை பழக்கம் உள்ளவர்கள் கிளப்(left handers club) என்ற அமைப்பை உருவாக்கினார். இந்த அமைப்பு 1992 ஆம் ஆண்டு இடதுகை பழக்கத்தின் நண்மைகள் மற்றும் தீமைகள் பற்றிய விழுப்புணர்வை ஏற்படுத்த சர்வதேச இடதுகை பயன்படுத்துவோர் தினத்தை அறிமுகப்படுத்தியது.
இடதுகை பழக்கம்
இடக்கை பழக்கமுள்ள குழந்தைகளை பெற்றோர் வலதுகையை பயன்படுத்துமாறு கண்டிப்பதுண்டு. இன்றளவும் இதைப்பற்றிய விழிப்புணர்வு சரிவர ஏற்படவில்லை என்பதுதான் நிதர்சனம். இப்பழக்கம் பிறப்பிலே சிலருக்கு ஏற்படுகின்றது, இயற்கைக்கு மாறாக இப்பழக்கத்தை மாற்ற முயற்சி செய்தால் பேச்சிலும் பார்வையிலும் குறைபாடுகள் ஏற்படலாம் என்கிறது அறிவியல்.
நமது மூலை மூன்று பகுதிகளை கொண்டுள்ளது, அவை பெருமூளை, சிறுமூளை மற்றும் முகுளம். இதில் பெருமூளை இடது, வலது என இரண்டு அரைக்கோளங்களை கொண்டுள்ளது. இடது பாக்க அரைக்கோளம் உடலின் வலது உறுப்புகளையும், வலப்பக்க அரைக்கோளம் உடலின் இடது உறுப்புகளையும் கட்டுப்படுத்துக்குறது. இதில் பெரும்பாலானோர்க்கு இடது பாக்க அரைக்கோளம் சற்று மேலோங்கியதாக இருக்கும். அதனால் அவர்களுக்கு வலப்பக்க உறுப்புகள் சிறப்பாக செயல்படும். ஆனால் ஒருசிலருக்கு வலப்பக்க அரைக்கோளம் மேலோங்கியதாக இருக்கும் அதனால் அவர்களுக்கு இடக்கை பழக்கம் ஏற்படுக்குறது. நவீன கால விஞ்ஞான விளக்கங்களின்படி இடக்கை பழக்கமுடையவர்கள் விவேகத்திறன் கூடியவர்கள் என்று கூறப்படுகிறது.
இடக்கை பழக்கமுள்ள பிரபலங்கள்
பிடல் காஸ்ட்ரோ (fidel castro) |
சர்ச்சின் (sachin) |
நம் நாட்டின் தேசத்தந்தை மகாத்மா காந்தியும் இடதுகை பழக்கமுள்ளவர். தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி, ரத்தன் டாடா, கிரிக்கெட் கடவுள் சர்ச்சின், இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பாக்ஸ்கன், நடிகை சன்னிலியோன் முதலிய பல பிரபலங்கள் இடதுகை பழக்கமுடையவர்கள்.
தனித்துவம் போக்கினைக் கொண்ட இடக்கை பழக்கமுள்ளவரின் செயல்பாடுகளை பெருமைப்படுத்தும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
إرسال تعليق