தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் மற்றும் இந்தியா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோணி இருவரும் சென்னையில் இன்று சந்தித்துள்ளனர். இந்த புகைப்படத்தை சென்னை சூப்பர் கிங்ஸ்(chennai super kings) அணி தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் பகிர்ந்துள்ளது, அதேபோல் விஜய் மற்றும் தோணி ரசிகர்கள் இந்த புகைப்படங்களை பகிர instagram, twitter, facebook போன்ற வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
என் இந்த திடீர் சந்திப்பு?
நடிகர் விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'பீட்ஸ்' படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் அனிருத் இசையமைத்துவருகிறார். கதா நாயகியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.
இப்பட பிடிப்பு மூன்று கட்டமாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது, பின்னர் சென்னையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது, தற்போது சென்னையிலேயே மூன்றாம் கட்ட படப்பிடிப்பு கோகுலம் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அங்கு ஒரு விளம்பர படப்பிடிப்பிற்காக தோணி வந்துள்ளார். தகவல் அறிந்த நடிகர் விஜய் தோணியை வரவேற்க இருவரும் சந்தித்து பேசினர். முன்னதாக 2008ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் விளம்பரம் தூதராக நடிகர் விஜய் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சந்திப்பு சிறிது நேரமே நிகழ்ந்ததாகவும், இருவரும் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இருப்பினும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நீண்ட நாட்களுக்கு பிறகு விஜய் மற்றும் தோணி இருவரும் சந்தித்து எடுத்துள்ள புகைப்படம் அவர்கள் ரசிகர்களின் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. #thalameetthalapathi என்ற ஹஸ்டாகில் இந்த புகைப்படங்கள்தான் தற்போது வைரல்.
இந்த நிலையில் 2008ஆம் ஆண்டு தோணி மற்றும் விஜய் எடுத்த புகைப்படத்தையும் தற்போது எடுத்த புகைப்படதையும் ஒப்பிட்டு மீம்ஸ் கிரேட்டர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
إرسال تعليق