Talibans in afghanistan : யார் இந்த தாலிபான்? இவர்கள் நோக்கம் என்ன? ஆப்கானிஸ்தானில் என்ன நடக்கிறது?

அப்கானிஸ்தான் தலைநகரான காபூலை தாலிபன்கள் கைப்பற்றிய பிறகு நாடு முழுவதும் பதற்றமான சூழ்நிலையே நிலவுகிறது. யார் இந்த தாலிபன்கள்? இவர்கள் நோக்கம் என்ன? தற்போது அப்கானிஸ்தானில் என்ன நடக்கிறது? ஆகியவற்றை இதில் காண்பது. 


தாலிபான் 


பஷ்தோ மொழியில் தாலிபான் என்றால் "மாணவர்கள்" என்று பொருள். இந்த இயக்கம் ஆப்கானின் காந்தகார் என்ற நகரில் 1994-ல் உருவானது. 

ஆப்கானிஸ்தான் அரசுக்கு ஆதரவாக இருந்த சோவியத் யூனியன் படைகள் அங்கிருந்து வெளியேறிய பின் சோவியத் யூனியன் பிளவு பட்டது. பிளவுபட்ட பின் நாட்டை தங்களுக்கானதாக மாற்றும் பல அமைப்புகளில் ஆப்கானிஸ்தானை தனக்காக மாற்ற உள்நாட்டு போரை நடத்தி வரும் அமைப்புதான் தாலிபான்.

முஜாகிதீன் அமைப்பு 


சோவியத் யூனியன் படைகளை ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்ற 1980-ல் அமெரிக்காவினால் உருவாக்கப்பட்ட அமைப்புதான் முஜாகிதீன்  தீவிரவாத அமைப்பு. இந்த அமைப்பில் இருந்த பலர் இந்த தாலிபன் அமைப்பில் இணைந்தனர். இந்த முஜாகிதீன் அமைப்பு அமெரிக்க அரசின் ஆதரவுடன் இயங்கி வந்தது. 

பல ஆண்டுகளுக்கு பிறகு, மிக பெரிய படையாக வளர்ந்த தாலிபான் அமைப்பு, 1996ல் முழு ஆப்கானிஸ்தானை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது அங்கு "இஸ்லாமிய எமிரேட் "என்ற பெயரில் இஸ்லாமிய சட்டங்களை கடுமையாக்கி ஆட்சியை தொடங்கியது. 2021 இல் ஆச்சி அதிகாரத்தை இழந்தது. 

தாலிபன் சட்டங்களும் தண்டனைகளும் 


தாலிபன்கள் ஐந்து ஆண்டுகள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் இருந்த போது அங்கு "ஷிரியத் சட்டம்" கடுமையாக கடைபிடிக்கபட்டது. அதன்படி பெண்கள் வேலைபார்க்கவும் படிக்கவும் கூடாது. அவர்கள் ஆண்துணை இல்லாமல் வீட்டை விட்டு வெளிய வரக்கூடாது. பெண்கள் ஆண்களிடம் பேசினால் அவர்கள் தலை துண்டிக்கப்படும் என்ற பயங்கரமான சட்டங்களை வகுத்திருந்தனர். பெண்கல்விக்கு எதிரான இவர்கள் பெண்கள் படிக்கும் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் அமைத்துள்ள நீர்த்தொட்டில் விஷத்தை கலந்தும், வகுப்பறையில் விஷ வாயுவை தெளித்தும் பெண்கள் கல்வியை அழிக்கப்பார்கிறார்கள். 

இந்த சட்டங்களில் இருந்து மீறுவோர் தண்டிக்கும் விதமாக பொது இடத்தில் தண்டிப்பது, சவுக்கடி கொடுப்பது எல்லாம் சாதாரணமாக இருந்தது. மேற்கத்திய நாட்டு திரைப்படங்கள், புத்தகங்கள் என எல்லாவற்றுக்கும் தடை இருந்தது. அவர்கள் கலாச்சாரத்தை கெடுக்கும் விதமாக இருந்த அனைத்திற்கும் அவர்கள் தடை விதித்தனர்.  

ஆப்கானிஸ்தானில் போர் நடக்க காரணம் என்ன? 


2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் நாள் அமெரிக்காவின் நியூயார்க் மாற்றும் வாஷிங்டன் நகரங்களில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுமார் 3000 பேர் கொல்லப்பட்டனர். 

இந்த தாக்குதலை திட்டமிட்டு நடத்தியது அல்கொய்தா அமைப்பும் அதன் தலைவர் ஒசாமா பின்லேடனும் என அமெரிக்க அரசு நம்பியது. இதனையடுத்து பின்லேடனை ஒப்படைக்குமாறு சர்வதேச தலைவர்கள்  ஆப்கானிஸ்தானிற்கு அழுத்தம் தந்தனர். 

அமெரிக்கா தாக்குதல் 

ஒசாமா பின் லேடன் 

ஒசாமா பின்லேடனை ஒப்படைக்க அந்நாட்டு தலைவர்கள் மறுத்துவிட்டனர். இதனையடுத்து ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி தாலிபான்களை அதிகாரத்தில் இருந்து அகற்றியது. அந்நாட்டை ஜனநாயக பாதையில் திருப்புவதாக அமெரிக்கா வாக்குறுதி அளித்து ஆப்கானிஸ்தானில் ஒரு புதிய அரசை  அமைந்தது. 

புதிய ஆப்கானிஸ்தானிற்கு ஆதரவு தெரிவித்த நாடுகள் 

அமெரிக்காவுக்கு நேட்டோ நாடுகள் (அமெரிக்க ஆதரவு ஐக்கிய நாடுகள் -வட அட்லாண்டிக் ஒப்பந்த நாடுகள் அமைப்பு) மற்றும் பிற நட்பு நாடுகள் ஆதரவு தெரிவித்தனர். இவர்கள் அங்கு புதிய அரசு அமையவும், நாட்டை மிள கட்டமைக்கவும் ஆதரவு தெரிவித்தனர். 

ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டாலும், ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டிருக்கும் சர்வதேச படையினர் மீது தாக்குதல் நடத்துவதை தாலிபன்கள் தொடர்ந்தனர்.  

தற்போதைய அவலநிலைக்கு காரணம் என்ன? 


17 வருடங்களாக போர் நீடித்து வந்தநிலையில் ஒரு சுமுகமான  தீர்வை எட்ட 2019-ல் அமெரிக்காவும் தாலிபானும் பேச்சுவார்த்தையை தொடங்கின. இந்த பேச்சுவார்த்தையில், அமெரிக்கா தன் படைகளை திருப்பி பெற்றுக்கொள்ளவும், ஆப்கானிஸ்தானில் புதிய அரசிடம்  அதிகாரத்தை வழங்கவும் உடன்பாடு ஏற்பட்டது. இதன் தொடர்ச்சிதான் நாம் இன்று காணும் நிலைமை. 

இப்போது என்ன நடக்கிறது? 

ஜோ பைடன் 

9/11 தாக்குதல் நடந்து சரியாக 20 ஆண்டுகள் நிறைவடையும் செப்டம்பர் 11, 21-க்குள் அமெரிக்க படைகளை வாபஸ் பெற்று கொள்வதாக 2021, ஏப்ரலில் தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்தார். அமெரிக்க படைகள் விலகினாலும் ஆப்கானிஸ்தானை பாதுகாக்கும் வலிமை அந்நாட்டு அரசுக்கு உள்ளது. தாலிபனால் எதுவும் செய்ய முடியாது என்று ஜோ பைடன் உறுதி அளித்தார். ஆனால் இப்போது நிலைமை தலைகீழாய் உள்ளது. 

தாலிபான்களின் எழுச்சி 


ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் எழுச்சி உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக அமெரிக்காவிற்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 20 ஆண்டுகளாக அமெரிக்க கட்டுப்பாட்டில் இருந்த நாடு வெறும் 20 நாளில் தலைநகர் காபூல் உட்பட அணைத்து இடங்களையும் பிடித்து முழு ஆப்கானிஸ்தானையும் தங்கள் அதிகாரத்தின் கீழ் கொண்டுவந்துள்ளார். 

இந்நிலையில் தாலிபான்கள் காபூலை கைப்பற்றிய நிலையில் மேலும் ரத்தக்களரி ஏற்படுவதை தடுக்கும் வகையில் அதிபர் அஷ்ரப் நாட்டை விட்டு தப்பிச்சென்றார். இதனையடுத்து ஆப்கானிஸ்தானில் போர் முடிவுக்கு வந்தது என தாலிபான்கள் அறிவித்துள்ளனர். அமைதியான முறையில் அதிகாரத்தை கைமாற்ற ஆப்கானிஸ்தான் அரசுடன் ஒரு முழு பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளது. 

அப்கானிஸ்தானின் புதிய அதிபர் யார்? 

அப்துல் கானி 

ஆப்கானிஸ்தானின் புதிய அதிபராக தாலிபான் அமைப்பின் இணை நிறுவனரான அப்துல் கானி பராதார் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தாலிபான் அமைப்பின் அதிகார வரிசையில் அதன் மூத்த தலைவர் ஹிபத்துல்லா ஹகுண்டஸ்தாவுக்கு அடுத்து இரண்டாம் நிலையில் இருக்கும் தலைவர் பராதார் தான். பாக்கிஸ்தான் சிறையில் இருந்த ஆவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் அமெரிக்காவின் கோரிக்கையின் படி விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தாலிபான்களின் தற்போதைய நிலைப்பாடு 


தாலிபான்கள் இந்தாண்டு தொடக்கத்தில் ஆப்கானிஸ்தானிற்கு ஒரு உண்மையான இஸ்லாமிய அமைப்பு வேண்டும் என்று விரும்பினார். அது கலாச்சார
பாரம்பரியம் மத விதிகளுக்கு ஏற்ப பெண்கள் மற்றும் சிறுபான்மையினருக்கான முறைப்படுத்தப்பட்ட உரிமைகள் வழங்கப்படும் என கூறியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் அரசு ஊழியர்களுக்கு பொது  மன்னிப்பு வழங்குவதால் தயக்கமின்றி அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று அறிவித்துள்ளனர். மேலும், ஆப்கானில் பெண்களுக்கான உரிமை தொடர்ந்து வழங்கப்படும், மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் பெண்கள் வழக்கம்போல் பணிபுரியலாம் அதற்கு எந்த தடையும் இல்லையென அறிவித்துள்ளார். இருப்பினும் சில பகுதிகளில் பெண்கள் வேலை செய்வதை தடை செய்வதற்கான குழு ஏற்கனவே தங்கள் பணியை தொடங்கியதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. 

Post a Comment

أحدث أقدم