August 19-World photography day : உலக புகைப்பட நாள் இன்று 19-08-2021

 

August 19 World photography day


வார்த்தைகளால் சொல்ல இயலாத பல விஷயங்களை ஒரு புகைப்படம் சொல்லும் என்பார்கள். அத்தகைய புகைப்படங்களின் படைப்பாளிகளை போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19 ஆம் நாள் "உலக புகைப்பட நாள்(World photography day)" கொண்டாடப்பட்டு வருகிறது.

 

புகைப்படம் என்பது வெறும் ஒரு படம் இல்லை, நம் வாழ்வின் மகிச்சியான தருணங்களையும், கசப்பான நிகழ்வுகளையும், மறக்க முடியாத தருணங்களையும் நம் கண்முன்னே கொண்டுவரும் காலத்தின் பொக்கிஷம். இது படைப்பாளிகளின் திறமையை வெளிப்படுத்தும் ஒரு நுட்பமான கலை. பல கருத்துக்களை ஒரே படத்தில் வெளிப்படுத்தும் அளவிற்கு இந்த புகைப்படங்களுக்கு வலிமை உண்டு.



மேலும் உலகளவில் இந்த புகைப்படங்கள் பல வரலாற்று மாற்றங்களை நிகழ்த்தியுள்ளது. ஒரு சந்ததியினரின் வாழ்கை முறையை, எதிர்காலத்தில் பின்வரும் தலைமுறையினர் அறிந்து கொள்ள உதவுவதும் இந்த புகைப்படங்கள்தான். இத்தைகைய சிறப்பு வாழ்ந்த புகைப்படங்கள் நம் வாழ்க்கையோடு ஒன்றிணைந்தவை. இத்தகைய புகைப்பட கலைஞர்களை போற்றும் விதமாகத்தான் நாம் இந்த நாளை ஆண்டுதோறும் கொண்டாடுகிறோம். 


ஒளிப்படவியல் (Photography)

ஒளிப்படவியல் என்பது, ஒளிப்பட தகடு அல்லது மின்னணு உணரி போன்ற ஒலிஉணர் ஊடகத்தின் மீது ஒளியை விழச்செய்து படங்களை பதிவு செய்யும் வழிமுறையாகும். ஒரு பொருளில் இருந்து வெளிப்படும் ஒளியானது உணர்திறன் கொண்ட வெள்ளி ஹைட்ரேட்டை அடிப்டையாகக் கொண்ட வேதியல் பூச்சின் மீது சென்று படும்போது அப்பொருளின் தோற்றம் வேதியல் அல்லது மின்னணு முறையில் சேமிக்கப்படுகிறது. இது ஒளிப்பட கருவின் மூலம் நிகழ்த்தப்படுகிறது. 

பல்வேறு துறைகளில் இது பயன்படுத்தப்படுகிறது. முக்கியமாக திரைப்படத்துறையில் இதான் பங்கு அதிகம். 

புகைப்படக் கலையின் தொடக்கம் 

முதன் முதலில் பிரிடிஷ் கண்டுபிடிப்பாளர், தாமஸ் வெட்ச்வூட் (Thomas wedgwood) அப்ஸ்கியூரா என்ற பெயரில் புகைப்படம் எடுக்கும் கருவி ஒன்றை கண்டுபிடித்தார். இவர் கண்ணாடியின் மீது நிழல் பிரதி ஓவியங்களை பதிவு செய்தார். இது 1802 இல் உலகில் முழுமையாகவும் தெளிவாகவும் அறியப்பட்டது. பின்னர் நிழல் படங்கள் குறிப்பிட்ட காலங்களுக்கு பிறகு இறுதியில் முழுமையாக கருமையடைந்தது தெரியவந்தது. 

1925 ஆம் ஆண்டு பிரஞ்சு நாட்டை சேர்ந்த ஜோசப் நிப்ஸ் (joseph niepce) என்பவர் ஒரு கட்டிடத்தின் புகைப்படத்தை தனது கருவில் படம் எடுத்தார். ஆனால் அந்த பிம்மம் 8 மணி நேரத்திற்கு பிறகு அழிந்து போனது. இந்த கட்டிடத்தின் புகைப்படமானது அப்ஸ்கியூரா லென்ஸின் மூலம் பதிவு செய்யப்பட்டது.

 இதான் பிறகு சர் ஜான் வெர்செல் என்பவர் 1839 ஆம் ஆண்டு கண்ணாடியை பயன்படுத்தி நெகடிவுகளை எடுக்கும் முறையை கண்டிடுபிடித்தார். இந்த புகைப்படக் கலைக்கு போட்டோகிராபி (photography) என்ற பெயர் வைத்தவரும் இவர்தான். போட்டோகிராபி என்ற சொல்லுக்கு கிரேக்க மொழியில் ஒளியின் எழுத்து என்று பொருள். 

டாகுரியோடைப் 

போட்டோகிராபி என பெயரிட்ட இதே ஆண்டில், லூயிஸ் டாகுரே என்பவர், சில்வர் காப்பர் பிளேட்டில் பிம்பம் விழும் வகையிலான புகைப்படம் எடுக்கும் முறையை கண்டுபிடித்தார். இந்த கருவி மரத்தால் செய்யப்பட்டு லென்ஸ் பொருத்தப்பட்டிருந்தது. இதற்கு டாகுரியோடைப் என்று பெயரிடப்பட்டு மிகவும் பிரபலமாக விளங்கியது. 

இந்த முறைக்கு பிரான்ஸ் அகாடமி அஃப் சயின்ஸ்(France Academy of science ) ஒப்புதல் அளித்தது. இந்த செயல்பாடுகளை 1839ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 நாள் பிரீ டு தீ வேர்ல்ட் (free to the world) என உலகறிய அறிவித்தது. இந்த நாளையே நாம் வருடம்தோறும் உலக புகைப்படம் தினமாக(World photography day) கொண்டாடுகிறோம். 

கேமராக்களின் உருவாக்கம் 

இதனையடுத்து பல புதிய முறையில் கேமெராக்கள் உருவாக்கப்பட்டன. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த வில்லியம் ஹெண்ட்ரி (william henry) என்பவர் 1841 இல் காலொடடைப் (Calotype) என்ற முறையை அறிமுகப்படுத்தினார். இதில் நெகடிவ் பேப்பர்களில் இருந்து பாசிட்டிவ் இமேஜ் உருவாக்கப்பட்டது. 

1851இல் பிரெடிரிக் ஸ்காட் (Frederick scott) என்பவர், சில்வர் நைட்ரெட் பயன்டுத்தப்பட்ட வெட் கொலோடியன் (wet plate collodion) முறையை அறிமுகப்படுத்தினார். 

1880 இல் செல்லுலாய்ட் பிலிம்களை (celluloid film)பயன்படுத்தி புகைப்படம் எடுக்கும் கருவியை ஜான் கார்பட் (jon corbutt), கன்னிபெல் குட்வின் (Hannibal goodwin) மற்றும் ஈஸ்ட்டுமென் கோடக் (Eastman kodak ) ஆகியோர் தயாரித்தனர். இதில் செல்லுலோஸ் நைட்ரெட் பயன்படுத்தியுள்ளது. 

1888 ஆம் ஆண்டு ஜார்ஜ் ஈஸ்ட்மென்(jorge eastman) பேப்பர் பிலிம்களை பயன்படுத்தி பாக்ஸ் கேமராவில் புகைப்படம் எடுக்கும் முறையை அறிமுகப்படுத்தினார். இதை தொடர்ந்து ஈஸ்ட்மன் கோடக் (eastmen kodak) 1990 இல் பாக்ஸ் பிரவுனி (Box Brownie) வகை காமெராவை அறிமுகப்படுத்தினார். 35மி.மீ ஸ்டீல் கேமராக்களை(Steel camera) 1913இல் ஆஸ்கர் பர்னக் வடிவமைத்தார். இது புகைப்படத்துறை அடுத்த கட்டத்திற்கு செல்ல வழிவகுத்தது. 

1981 ஆம் ஆண்டுதான் முதன் முதலில் பிக்சல்(pixel) முறையில் புகைப்படம் எடுக்கும் டிஜிட்டல் கேமரா உருவாக்கப்பட்டது. இது சோனி(Sonic) நிறுவனம் தயாரித்தது. புகைப்பட துறையின் அடுத்த பரிணாமத்திற்கு இது பெரிதும் உதவியது. இதனைத்தொடர்ந்து செல்போனில் கேமராக்கள் பொருத்தப்பட்டன இதன் விளைவாக நொடிக்கு நொடி புகைப்படங்கள் எடுத்து தள்ளப்படுகின்றன. 

ஒரு காலகட்டத்தில் புகைப்படம் எடுத்தல் ஆயுள் குறையும் என்ற மூட நம்பிக்கை பரவலாக இருந்தது தற்போது அது அனைத்தும் தவிடு பொடியாகிவிட்டது. நடந்தால் செல்பி, உட்காந்தாள் செல்பி, சாப்பிட்டால் செல்பி என தற்போது அனைவரும் செல்பி மோகத்தில் மூழ்கிபோய் உள்ளோம். 

இந்த நாளின் முக்கியத்துவம் 

முன்பெல்லாம் புகைப்படம் எடுப்பது மிகவும் அரிதான செயலாய் இருந்தது. ஆனால் தற்போது புகைப்படம் எடுப்பது மிகவும் எளிதாகிவிட்டது. குழந்தைகள் கூட தற்போது தாங்களாகவே புகைப்படம் எடுக்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் இளைனர்கள் புகைப்படம் எடுப்பதை ஒரு பேஷனாக பார்த்து வருகின்றனர். புகைப்படம் எடுப்பதன் மீதுள்ள ஆர்வம் இங்க பலரை புகைப்படம் கலைஞராக உருவாக்கியுள்ளது. எனவே உலக புகைப்பட நாள் இந்த துறையில் ஆர்வமுள்ள மக்களை ஊக்குவிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த டிஜிட்டல் யுகத்தில், புகைப்படக் கலையை வளர்பதற்காகவும், அதன் நுணுக்கங்களை கற்றுத்தருவதற்கும் புகைப்பட தொழில் குறித்த நிறைய புத்தகங்களும் இதழ்களும் வெளிவருகின்றன. இதான் நீட்சியாகத்தான் உலகெங்கும் புகைப்பட போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் புகைப்படக்கலை அணைத்துத்தரப்பு மக்களிடமும் விருப்பமான கலையாக மாறிவிட்டது. 

Post a Comment

أحدث أقدم