+2 தேர்வு முடிவுகள் தேதி அறிவிப்பு
ரிசல்ட் பார்ப்பது எப்படி?
தமிழகத்தில் +2 தேர்வு முடிவுகuள் ஜூலை 19 -ம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த முடிவுகள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in,www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in..........ஆகிய இணையதளங்களில் வெளியிடப்படும்.
பள்ளி மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மதிப்பெண்களுடன் கூடிய தனது தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
மாணவர்களுக்கு குறுந்செய்தி மூலமாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என் தமிழக அரசு தேர்வு இயக்கம் தெரிவித்துள்ளது.
மேலும் 22-ம் தேதி காலை 11மணி முதல் மாணவர்கள் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மதிப்பெண் எவ்வாறு கணக்கிடப்பட்டுள்ளது?
தமிழ்நாட்டில் கொரோன பரவல் காரணமாக +2 மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படாமல் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, மாணவர்களுக்கு 10ம் வகுப்பு பொது தேர்வில் எடுத்த மதிப்பெண்களில் 50%, +1பொது தேர்வில் 20%, +2செய்முறை தேர்வில் 30% என்ற அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
إرسال تعليق